கல்முனை மாநகர சபையில் இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை மாநகர சபையில்  அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்களை இன்று 05 ஆம் திகதி புதன்கிழமை கையொப்பம் இட்டு கடமை செய்ய வேண்டாம் என மாநகர சபை ஆணையாளர்  தடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு  பட்டனர் 
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களிடம் வினவியபோது;
மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி வழமை போன்று கடமைக்கு வருகை தந்த எங்களை ஒப்பமிட வேண்டாம் என உத்திரவிட்டார் என்றனர்.
ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் வினவியபோது அவர் சிரித்தவராக மேயரிடம் பேசிவிட்டு இது விடயத்தைச் சொல்லுகின்றேன் என்றார்.
மேயரிடம் அவர் பேசிய பின் தேடிய போது அவர் தனது இடத்தில் காணப்படவில்லை. அவசர அலுவல்கள் நிமிர்த்தம் வெளியில் போய் விட்டார் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபிடம்  வினவியபோது;
“ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருடன் கதைத்த பின்னரே என்னால் இது பற்றி எதுவும் கூற முடியும்.
ஆணையாளர்தான் நியமன அதிகாரி அவர்தான் மாகாண சபையின் சுற்று நிருபத்திற்கமைய நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிய சுற்று நிருபத்தின்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பவர்களே நியமிக்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுவதாகவும் மேயர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்