பொதுபல சேனாவின் கல்முனைக் கூட்டம் சோடிக்கப்பட்ட செய்தி, இதில் உண்மையில்லை

முதல்வர் சிராஸ் மீராசாஹிப்


இது விடயமாக கல்முனை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபை தொடர்பு கொண்டபோது அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் கூட்டமும் பேரணியும் நடாத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்ற நிலையில், கல்முனை மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்கு உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தலும் இக்கருத்தினை வெளியிடும் வரை கிடைக்கவில்லை என்பதுடன் நானும் இது விடயமாக எவ்வித அனுமதியையும் யாருக்கும் வழங்கவுமில்லை..

முதல்வர் என்ற வகையில் இந்த விடயத்தை மேலும் உறுதி செய்து கொள்வதற்காக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது அவரும் இவ்வாறான எந்த அறிவித்தலும் இது வரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அவ்வாறான அறிவித்தல்கள் ஏதாவது கிடைக்கப் பெற்றால் தனக்கு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிப்பதாக தெரிவித்திருக்கின்றார் என்று மேலும் முதல்வர் தெரிவித்தார்.

இதுவிடயமாக பிரதேச மக்கள் வெறுமனே பத்திரிகை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு பீதியடைய வேண்டாம் எனவும் பொதுமக்களை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்