தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவரை தீக்குளிக்க வைக்கப்படும் காட்சி இது…!!
வெளிப்படையாகவே.. இக்காணொளியை பார்க்கின்ற போது , தீக்குளிப்பில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட ‘பௌத்த பிக்கு’ முன்பாக காணப்படும் இருவர் ( டீ குடிப்பதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்கள்) இந்த திட்டமிட்ட தீக்குளிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களாக உள்ளார்கள் என்பது வெளிப்படையானது.
இந்த விடயம் ஏற்கனவே குறித்த தேரரால் அரச ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு தேரரால் தெரிவிக்கப்பட்டதாகவும்.., எனினும் குறித்த செய்தியாளர் அதனை இரகசியமாக பேணியதுடன் பௌத்த பிக்கு தமக்கு தாமே தீ மூட்டிய சம்பவத்தை முழுமையாக வீடியோ மூலம் படமாக்கினார். பின்னர், இந்த சம்பவத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்யபட்டதாக தெரிய வருகின்றது.
ஆனால் இத் தற்கொலை சப்பவத்துக்கு உடந்தையாக இருந்து பௌத்த பிக்குவை தீ மூட்டியவர்களை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்பவர்களை விட தற்”கொலை”க்கு தூண்டுகின்றவர்கள் தான் மிகவும் முக்கிய குற்றவாளிகள்.
எனவே.., முஸ்லிம் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் இவ்விடயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டு.., சமூகங்களுக்கிடையிலான இனமுரண்பாடுகளை தோற்றுவிப்பதற்காக சில தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்படும் இதுபோன்ற “ஈனச்செயல்” களை சாதாரண சிங்கள மக்களுக்கு இக் காணொளியை போட்டு காட்டி இதன் உண்மை தன்மையை தெரியப்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் தங்களை பிரபல்ய படுத்துவதற்காக செய்யப்படும் இக் கொடுமையான செயல்களை மூவின மக்களுக்கும் உணரவைக்கலாம் என்பது எங்கள் அபிப்பிராயம்…
வீடியோ
(*** தேரருக்கு (பௌத்த பிக்குக்கு) பக்கத்தில் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் நபராலேயே தேரர் மீது தீ வைக்கப்படுவதும், தீ பரவியதும் அவ்வழியால் சென்ற பொதுமக்கள், இராணுவத்தினர் போன்றோரால் தீயை அணைக்க தண்ணீர் ஊற்றப்படும் வேளை யாரோ ஒருவரால் அவர் மீது திரவகப்பொருள் (பெற்றோல் அல்லது மண்எண்ணை) தண்ணீருடன் கலந்து அவர் மீது ஊற்றப்படுவதாலேயே அவர் மீதான நெருப்பு அணையாமல் மீண்டும், மீண்டும் கொழுந்து விட்டு எரிவதை.. நீங்கள் இவ்வீடியோவை திருப்பித் திருப்பி பார்க்கும் போது தெளிவாக உணர்வீர்கள்…!!! )
Comments
Post a Comment