சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்
சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையிலிருந் து இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத தோற்றி சித்தியடைந்த 5 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களும் அக்கரைப்பற்று உதவும் கரங்கள் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இது தொடர்பான வைபவம் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதில் உதவி அதிபர் எம்.எஸ். நஸார் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது சாய்ந்தமருது கோட்ட மட்டத்தில்184 அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இப்பாடசாலையைச் சேர்ந்த எம்.ஏ.சபீக் அப்றின் உட்பட மேற்படி ஐந்து மாணவர்களும் கற்பித்த நான்கு ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 70புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களுக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment