18 மீனவர்கள் பலி: 36பேரை காணவில்லை
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 36பேர் காணாமல் போயுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் களுத்துறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 37 மீன்பிடிப் படகுகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி அமைச்சு, காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment