கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனைக்குடி மத்ரசா வீதியில் அமைந்துள்ள மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், வாசல் கதவு, சுவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன.
இத்தாக்குதலின் போது மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதிப்புகளை பார்வையிட்ட கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment