வனவள அமைச்சரை 2. கீ.மீ தூரம் துரத்திச் சென்ற இரண்டு யானைகள்


வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாவையே யானைகள் இரண்டு சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு  துரத்திய சென்றுள்ளது.

கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு யானைகளே அமைச்சர் பயணித்த வாகனத்தை இவ்வாறு துரத்தியுள்ளன.

அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத்தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின் இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக்கொண்டுவந்தார்.

குறித்த பிரதேசத்தில் 25க்கும் 30 க்கும் இடைப்பட்ட யானைகள் இருக்கின்றன.

அவ்விடத்திற்கு வரும் மிருகங்களுக்கு உணவுகளை வழங்கவேண்டாமென வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் சாப்பாடு கொடுப்பதனால் யானைகள் வீதிகளுக்கு பிரவேசிப்பதாகவும் இது மிருகங்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்