ரிஸானா நபீக்கை அவரது பெற்றோர் நாளை சந்திக்க ஏற்பாடு!
சவுதி அரேபியாவில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை அவரின் பெற்றோர் நாளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரிஸானாவின் பெற்றோர் இன்று சவுதிஅரேபியாவுக்கு பயணமாகவுள்ளனர். ரிஸானாவின் பெற்றோருடன்- அரசாங்க பிரதிநிதிகள் சிலரும் சவுதி நோக்கிச் செல்லவுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிடுகின்றது. இலங்கை பிரதிநிதிகள் குழுவில்- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க- வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க விஜேரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் நாளைய தினம் ரிஸானாவை சந்திப்பதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு செல்லவிருப்பதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது. மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் இன்னும் சில பிரதிநிதிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி சவுதி அரேபியா வரவுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்