நவம்பர் -14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையி்ல்

நவம்பர் -14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று திங்கள் கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையி்ல்   இடம் பெற்றது.

இதன் போது மக்களுக்கு விழிப்பூட்டும் வீதி ஊர்வலம்,  மக்களுக்கு இந்நோய் தொடர்பான துண்டுப்பிரசூரங்கள் வழங்கள், பொது மக்களுக்கு இலவச இரத்தம் மற்றும் இரத்த அமுக்கப் பரிசோதனைகள் உட்பட பொது மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்பூணர்வுக்கருத்தரங்கு போன்றன இடம் பெற்றது.

இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உட்பட பாடசாலை மணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இந்நிகழவின் போது ஆரோக்கியமான உணவுகளையே உண்பதற்காக பரிமாரிக் கொண்டது விஷேட அம்சமாகும்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்