சாய்ந்தமருதில் திவிநேகும வேலை திட்டம்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் ' திவி நெகும ' மனைப்பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் மத்தியில் பயிர்ச்செய்கையினை ஊக்குவித்து அவர்களின் பொருளாதார நிலமையினை உயர்த்துவதுடன் நச்சற்ற போசாக்குள்ள உணவுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் இ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் இ சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோஸ்தர்களான ஏ.பி.எம்.அஸ்ஹர் இ ஏ.எல்.ஏ.மஜீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது