இலங்கையில் ஆண்டொன்றிற்கு சுமார் 80,000 விபத்துக்கள்
நவம்பர் 14-20 வரை விழிப்புணர்வு வாரம்:
* 2000-2500 பேர் வரை உயிரிழப்பு
* கவனயீனம், குடிபோதை காரணம்
* கவனயீனம், குடிபோதை காரணம்
வீதி விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் மற்றும் பாதிப்புக்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாரமாக எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரையான காலப்பகுதியை சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
தற்போது பெருந்தெருக்கள், வீதிகள் அபிவிருத்தியடைந்துவரும் நிலையில் மக்களின் கவனயீனம், குடிபோதை போன்ற காரணங்களினால் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன. ஒரு செக்கனுக்கு இரண்டு பேர் வீதம் தினமும் விபத்துக்குள்ளாவதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 2000 முதல் 2500 பேர் வரை உயிரிழக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் 2328 பேர் உயிரிழந்தனர். வருடாந்தம் 80 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெறு கின்றன. இவற்றில் 30 ஆயிரம் விபத்துக்கள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய விபத்துக்களாகும்.
தினம் ஒன்றுக்கு வீதி விபத்துக்களால் 6 பேர் உயிரிழக்கின்றனர். வீதி விபத்துக் களினால் பாரிய சவால்களை எதிர்நோக்கி யிருப்பது வைத்தியசாலைகளே. கடுமையான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்ட ஒருவர் அவர் பூரணமாகக் குணமடைந்து வெளியேறும்வரை சிகிச்சை யளிக்கப்படுகிறது. இதற்கென ஒரு மில்லியன் ரூபாவிலிருந்து 10 மில்லியன் ரூபாவரை செலவிடவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த செலவுகள் சேவைகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
வீதி விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காயங்களிலிருந்து விடுபடுவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும்.
தொற்றாநோய் தொடர்பான வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையிலுள்ள மக்கள் சுகாதாரப் பிரிவு வைத்திய அதிகாரிகளினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அமைச்சு வட்டத்திலான வைபவம் எதிர்வரும் 20ஆம் திகதி சுகாதார அமைச்ச ர் மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெறவுள்ளது
Comments
Post a Comment