கல்முனை முதல்வரை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டும் விழா
கல்முனை முதல்வர் கலாநிதி
சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும்
மக்களும் பாராட்டி
கௌரவிக்கும் மாபெரும்
விழா நேற்று இரவ சாய்ந்தமருது பீச்
பார்க்கில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ்
தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம
அதிதியாக பங்கேற்றார். கௌரவ அதிதிகளாக
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்
கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாணசபை
உறுப்பினர்கள், வர்தக சங்க பிரதிநிதிகள்,
கல்விமான்கள், உயரதிகாரிகளும் கலந்து
சிறப்பித்தனர்.
Comments
Post a Comment