ஐஸ்வர்யா பிரசவத்திற்கு 7 நட்சத்திர மருத்துவமனை
11-11-11 இல் பிரசவம் நடக்க பச்சன் குடும்பம் விரும்பம் -
ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர் .நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு பிரசவம் நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால் அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் ஏற்கனவே முன் பதிவூ செய்யப்பட்டுள்ளது.
அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும் அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார்
Comments
Post a Comment