எடின்பரோ கோமகன் விருது ” க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணம்.

“ எடின்பரோ கோமகன் விருது ” க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணத்தை கல்முனையில் இருந்து 38 இளைஞர்கள் நேற்று திங்கள் கிழமை மாலை பயணமாகினார்கள்.

மேற்படி விருதைப் பெற்றுக்கொள்வதற்காக கல்முனை தீனத் இளைஞர் கழகத்திலிருந்து 38 இளைஞர்கள் பொத்துவில் கொட்டுக்கல் எனுமிடத்திற்கு கள ஆய்விற்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு முகாமிடல். பிரதேசம் பற்றிய ஆய்வு. காலை பகல் உணவுகளை தயாரித்தல் போன்ற பயிற்சிகளையும் பெறவுள்ளனர்.

இப்பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு கல்முனை இக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும்  மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயளாலருமான நிசாம் காரியப்பா்  தனது இல்வலத்தில் வைத்து அறிவுரை கூறி வாழ்தி வழியனுப்பி வைத்தார். 

இந்நிகழ்வில் தீனத் அமபை்பின் முன்னால் தலைவர் எம்.வை.எம்.முஜிபுடீன் மற்றும் ஊடகவியளாலர் எஸ்.எம்.எம்.றம்ஸான் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்