குர்பான் பிரச்சினை ஏற்பட்டால்
குர்பான் பிரச்சினை ஏற்பட்டால் 072-3007300 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்!
முஸ்லிம்கள -குர்பான்- கடமையை ஏனைய சமூகங்களின் உணர்வூகளை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடமையை நிறைவேற்றுவதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக தமது இணைப்புச் செயலாளரான எம். சில்மியின் 072-3007300 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்காக திறந்த பொது இடங்களிலும்- வீதிகளிலும்- மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் மாடுகளை அறுக்காதீர்கள் என்றும் பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவூடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவூம் அமைச்சர் தெரிவித்தார்.
Comments
Post a Comment