கல்முனை பிரதேச கடல்பரப்பில் பெருந்தொகையான கீரி மீன்கள் (சூடை)

கல்முனை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை இன்று சற்று குறைந்ததனை தொடர்ந்து கரைவலை மீனவர்களால் பெருந்தொகையான கீரி மீன்கள் (சூடை) பிடிக்கப்பட்டன.

கடந்த சில தினங்களாக இப்பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய நிலையில் கல்முனை பிரதேச சந்தைகளிலும் வீதியின் இருமருங்குகளிலும் கீரி மீன்கள் மிக மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதனால் கல்முனை பிரதேச கடல்பரப்பில் காணப்பட்ட இயந்திர படகுகள் ஒலுவில் மற்றும் வாழைச்சேனை போன்ற படகு இறங்கு துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்