புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும்
துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (27) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் அகில இலங்கை ஜமியதுல் உலமாசபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள்இ ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று நாட்டின் எப்பாகத்திலும் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் துல்கஃதா மாதத்தினை முப்பதாக நாளை நிறைவு செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகின்றது என்ற தகவலை கூடிய பிறைக்குழு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment