சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேடஸ் உதவும்; கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பரிடம் தூதுவர் உறுதி
சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை பிரதேச மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேடஸ் தயாராகவுள்ளதாக அந்நாட்டுத் தூதுவர் மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூத கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் உறுதியளித்துள்ளார்.
கல்முனை மாநகர பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற் தடவையாக இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூதை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போதே சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவும் என தூதுவர் உறுதியளித்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஏழு வருடங்களாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய அரபு எமிரேடஸ் தூதுவரிடம் கல்முனை மாநகர பிரதி மேயர சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெளிவுபடுத்தினார். இந்த மக்களுக்கு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய உதவி திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவொன்றையும் தூதுவர் மஹ்மூதிடம் அவர் கையளித்தார்.
இதேவேளை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தூதுவர் விரைவில் கல்முனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Comments
Post a Comment