மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு
கல்முனை விஷன் ஒப் பெஸ்டர் அமைப்பு வெள்ளிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அமைப்பின் தலைவர் யு.எல்.எம்.ஹிலால் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உணவு மற்றும் போசாக்கு சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரெட்ணவும் விஷேட அதிதியாக வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்ன தேரரும் கலந்து கொண்டனர். கல்முனை மாநகர சபைக்கு பொதுஜன ஐக்கிய முன்னணி சபர்பில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பெஸ்டர் றியாஸ் பிரதேச மக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில் தொடர்ச்சியாக 35 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட அமைச்சராக மற்றும் அமைச்சராக மக்களுக்கு சேவையாற்றிவரும் அமைச்சர் பீ.தயாரெட்னவும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Comments
Post a Comment