பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒன்று கூடல்
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒரு நாள் ஒன்று கூடல் பயிற்சிப் பாசறை நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இடம் பெற்றது.
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் வழிகாட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஐந்து பாடசாலைகளில் இருந்து 100 மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றதுடன் போட்டி நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு திறமைகளைக்காட்டி பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய உதவி ஆணையாளருமன எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிவைத்தார்.
Comments
Post a Comment