மட்டு. கல்லடிபாலம் ஊடான போக்குவரத்து மூடப்படும்
மட்டக்களப்பில் புதிதாகக் கட்டப் பட்டு வரும் கல்ல டிப் பாலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள வேலை காரணமாக எதிர்வரும் 10ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை கல்லடிப்பாலம் மூடப்படவுள்ளதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் வை. தர்மரெத்தினம் தெரிவித்தார்.
இம்மாதம் 10ம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் 11ம் திகதி அதிகாலை 4.00 மணிவரை கல்லடிப்பலாத்தினூடாக எதுவித போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த 6 மணி நேரத்துள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் பயணிப்பவர்கள் வேறு வீதிகளினூடாக பயணித்தல் வெண்டும்.
Comments
Post a Comment