Posts

ரிஸானா நபீக்கை அவரது பெற்றோர் நாளை சந்திக்க ஏற்பாடு!

சவுதி அரேபியாவில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை  அவரின் பெற்றோர் நாளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரிஸானாவின் பெற்றோர் இன்று சவுதிஅரேபியாவுக்கு பயணமாகவுள்ளனர். ரிஸானாவின் பெற்றோருடன்- அரசாங்க பிரதிநிதிகள் சிலரும் சவுதி நோக்கிச் செல்லவுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிடுகின்றது. இலங்கை பிரதிநிதிகள் குழுவில்- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க- வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க விஜேரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் நாளைய தினம் ரிஸானாவை சந்திப்பதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு செல்லவிருப்பதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது. மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் இன்னும் சில பிரதிநிதிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி சவுதி அரேபியா வரவுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்

நவம்பர் -14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையி்ல்

Image
நவம்பர் -14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று திங்கள் கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையி்ல்   இடம் பெற்றது. இதன் போது மக்களுக்கு விழிப்பூட்டும் வீதி ஊர்வலம்,  மக்களுக்கு இந்நோய் தொடர்பான துண்டுப்பிரசூரங்கள் வழங்கள், பொது மக்களுக்கு இலவச இரத்தம் மற்றும் இரத்த அமுக்கப் பரிசோதனைகள் உட்பட பொது மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்பூணர்வுக்கருத்தரங்கு போன்றன இடம் பெற்றது. இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உட்பட பாடசாலை மணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்த கொண்டனர். இந்நிகழவின் போது ஆரோக்கியமான உணவுகளையே உண்பதற்காக பரிமாரிக் கொண்டது விஷேட அம்சமாகும்.

கல்முனை முதல்வரை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டும் விழா

Image
கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும்  விழா நேற்று இரவ சாய்ந்தமருது பீச்  பார்க்கில் இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்  சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ்  தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம  அதிதியாக பங்கேற்றார். கௌரவ அதிதிகளாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்  கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட  உறுப்பினர்கள், வர்தக சங்க பிரதிநிதிகள், கல்விமான்கள், உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மைக்கல் ஜக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்

Image
மைக்கல் ஜக்சனின் இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள், அமெரிக்காவில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மைக்கல் ஜக்சன், தனது இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்களை, அடுத்த மாதம் 12 ம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளோம். டிசம்பர் 17 ஆம் திகதி, இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஜக்சன் மரணமடைந்த படுக்கை அதிக ஏலத்திற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஹஜ்ஜுப் பொருநாள் விளையாட்டு

Image
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளைாயாட்டு நிகழ்வு ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்திகுட்பட்ட மத்திய முகாமின் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தின் மைதாணத்தில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மேற்படி பாடசாலையின் பழைய மாணவா்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்றற இந்நிகழ்வில் சட்டி உடைத்தல், கிறீஸ் மரம் ஏறுதல், தலையணியால் அடித்தல் , சூப்பியால் சோடாவை குடித்தல், பாரம் தூக்குதல், முட்டை மாற்றுதல், குறிபார்த்து எரிதல், வினோத உடை போன்ற பல்வேறு  நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஐஸ்வர்யா பிரசவத்திற்கு 7 நட்சத்திர மருத்துவமனை

Image
11-11-11 இல் பிரசவம் நடக்க பச்சன் குடும்பம் விரும்பம் -   ஹிந்தித் திரை உலக முன்னணி நட்சத்திரமான ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தினை  மும்பையிலுள்ள 7 நட்சத்திர மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர் .நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு பிரசவம்  நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால்  அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் ஏற்கனவே முன் பதிவூ செய்யப்பட்டுள்ளது. அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும்  அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் 

இலங்கையில் ஆண்டொன்றிற்கு சுமார் 80,000 விபத்துக்கள்

நவம்பர் 14-20 வரை விழிப்புணர்வு வாரம்: * 2000-2500 பேர் வரை உயிரிழப்பு * கவனயீனம், குடிபோதை காரணம் வீதி விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் மற்றும் பாதிப்புக்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாரமாக எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரையான காலப்பகுதியை சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது பெருந்தெருக்கள், வீதிகள் அபிவிருத்தியடைந்துவரும் நிலையில் மக்களின் கவனயீனம், குடிபோதை போன்ற காரணங்களினால் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன. ஒரு செக்கனுக்கு இரண்டு பேர் வீதம் தினமும் விபத்துக்குள்ளாவதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 2000 முதல் 2500 பேர் வரை உயிரிழக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் 2328 பேர் உயிரிழந்தனர். வருடாந்தம் 80 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெறு கின்றன. இவற்றில் 30 ஆயிரம் விபத்துக்கள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய விபத்துக்களாகும். தினம் ஒன்றுக்கு வீதி விபத்துக்களால் 6 பேர் உயிரிழக்கின்றனர். வீதி விபத்துக் களினால் பாரிய சவால்களை எத...

எடின்பரோ கோமகன் விருது ” க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணம்.

Image
“ எடின்பரோ கோமகன் விருது ”  க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணத்தை கல்முனையில் இருந்து 38 இளைஞர்கள் நேற்று திங்கள் கிழமை மாலை பயணமாகினார்கள். மேற்படி விருதைப் பெற்றுக்கொள்வதற்காக கல்முனை தீனத் இளைஞர் கழகத்திலிருந்து 38 இளைஞர்கள் பொத்துவில் கொட்டுக்கல் எனுமிடத்திற்கு கள ஆய்விற்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு முகாமிடல். பிரதேசம் பற்றிய ஆய்வு. காலை பகல் உணவுகளை தயாரித்தல் போன்ற பயிற்சிகளையும் பெறவுள்ளனர். இப்பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு கல்முனை இக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும்  மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயளாலருமான நிசாம் காரியப்பா்  தனது இல்வலத்தில் வைத்து அறிவுரை கூறி வாழ்தி வழியனுப்பி வைத்தார்.  இந்நிகழ்வில் தீனத் அமபை்பின் முன்னால் தலைவர் எம்.வை.எம்.முஜிபுடீன் மற்றும் ஊடகவியளாலர் எஸ்.எம்.எம்.றம்ஸான் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேடஸ் உதவும்; கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பரிடம் தூதுவர் உறுதி

Image
சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை பிரதேச மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேடஸ் தயாராகவுள்ளதாக அந்நாட்டுத் தூதுவர் மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூத கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் உறுதியளித்துள்ளார்.   கல்முனை மாநகர பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற் தடவையாக இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூதை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவும் என தூதுவர் உறுதியளித்துள்ளார்.  சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஏழு வருடங்களாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய அரபு எமிரேடஸ் தூதுவரிடம் கல்முனை மாநகர பிரதி மேயர சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெளிவுபடுத்தினார். இந்த மக்களுக்கு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய உதவி திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவொன்றையும்...

மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு

Image
  கல்முனை விஷன் ஒப் பெஸ்டர் அமைப்பு வெள்ளிக்கிழமை கல்முனை  அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அமைப்பின்  தலைவர் யு.எல்.எம்.ஹிலால் தலைமையில் இடம்பெற்றது. இந்  நிகழ்வில் பிரதம அதிதியாக உணவு மற்றும் போசாக்கு  சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரெட்ணவும் விஷேட அதிதியாக   வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்ன தேரரும் கலந்து கொண்டனர். கல்முனை மாநகர சபைக்கு பொதுஜன ஐக்கிய முன்னணி சபர்பில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பெஸ்டர் றியாஸ் பிரதேச மக்களால்  பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில் தொடர்ச்சியாக 35 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட அமைச்சராக மற்றும் அமைச்சராக மக்களுக்கு சேவையாற்றிவரும் அமைச்சர் பீ.தயாரெட்னவும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குர்பான் பிரச்சினை ஏற்பட்டால்

Image
குர்பான் பிரச்சினை ஏற்பட்டால் 072-3007300 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்! முஸ்லிம்கள -குர்பான்- கடமையை ஏனைய சமூகங்களின் உணர்வூகளை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடமையை நிறைவேற்றுவதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக தமது இணைப்புச் செயலாளரான எம். சில்மியின் 072-3007300       என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா  வேண்டுகோள் விடுத்துள்ளார். குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்காக திறந்த பொது இடங்களிலும்- வீதிகளிலும்- மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் மாடுகளை அறுக்காதீர்கள் என்றும் பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவூடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவூம் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவைக்கு14 முஸ்லிம்கள்

Image
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் 14 முஸ்லிம்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் ஒன்பது பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். சித்தியடைந்த 14 முஸ்லிம்களுள் ஐவர் பெண்களாவர். இப்பரீட்சையில் நாடு பூராவும் 516 பேர் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் அரைவாசிப் பேரை இவ்வருட இறுதிக்குள் நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேமுகப் பரீட்சை விரைவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. நேமுகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 முஸ்லிம்களின் பெயர்கள் வருமாறு; * எம்.எஸ்.எம்.ரஸ்ஸான்– மருதமுனை * எம்.எல்.எப்.மபூஸா– தெகிவளை * எஸ்.ஆர்.முஹம்மத்– உடதலவின்ன * எம்.ஆர்.எஸ்.ஹக்– ஏறாவூர் * எம்.ஏ.எச்.சிஹானா– ஏறாவூர் * எம்.சி.ஏ.றமீசா– ஏறாவூர் * எம்.ஜே.எப்.பௌசானா– பெந்தோட்ட * ஐ.எம்.றிகாஸ்– ஏறாவூர் * எம்.ஏ.சி.ஏ.சபீர்– அட்டாளைச்சேனை * எம்.எம்.ஹாலிதா– திருகோணமலை * எம்.எச்.ஏ.எம்.றிப்லான்– மக்கோண * எம்.எம்.ஆசீக்– நற்பிட்டிமுனை * ஏ.சி.ஏ.அப்கர்– அட்டாளைச்சேனை * ஏ.யு.எம்.சிஹான்– படல்கும்புற
Image

பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒன்று கூடல்

Image
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒரு நாள் ஒன்று கூடல் பயிற்சிப் பாசறை நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இடம் பெற்றது. அக்கரைப்பற்று - கல்முனை    மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில்    பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் வழிகாட்டலில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் ஐந்து பாடசாலைகளில் இருந்து 100 மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றதுடன் போட்டி நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு திறமைகளைக்காட்டி பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று - கல்முனை  மாவட்ட  சாரணிய உதவி  ஆணையாளருமன எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிவைத்தார்.

அல்-மிஸ்பாஹ் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சி

Image
 கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.   அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று - கல்முனை  மாவட்ட  சாரண உதவி  ஆணையாளருமன எஸ்.எல்.முனாஸ் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கா ஒதுக்கப்பட்ட நிதியின் காசோலையை அப்பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியரும் மாவட்ட சாரணத் தலைவருமான எஸ்.எம்.எம்.றம்ஸான் மற்றும் பாடசாலையின் பெண்கள் சாரண அணித் தலைவியிடமும் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில்  கல்முனை - அக்கரைப்பற்று மாவட்ட சாரண  பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட சாரண பொறுப்பாசிரியா்களும் கலந்த கொண்டனர். .

கல்முனை பிரதேச கடல்பரப்பில் பெருந்தொகையான கீரி மீன்கள் (சூடை)

Image
கல்முனை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை இன்று சற்று குறைந்ததனை தொடர்ந்து கரைவலை மீனவர்களால் பெருந்தொகையான கீரி மீன்கள் (சூடை) பிடிக்கப்பட்டன. கடந்த சில தினங்களாக இப்பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய நிலையில் கல்முனை பிரதேச சந்தைகளிலும் வீதியின் இருமருங்குகளிலும் கீரி மீன்கள் மிக மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதனால் கல்முனை பிரதேச கடல்பரப்பில் காணப்பட்ட இயந்திர படகுகள் ஒலுவில் மற்றும் வாழைச்சேனை போன்ற படகு இறங்கு துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மட்டு. கல்லடிபாலம் ஊடான போக்குவரத்து மூடப்படும்

Image
மட்டக்களப்பில் புதிதாகக் கட்டப் பட்டு வரும் கல்ல டிப் பாலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள வேலை காரணமாக எதிர்வரும் 10ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை கல்லடிப்பாலம் மூடப்படவுள்ளதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் வை. தர்மரெத்தினம் தெரிவித்தார். இம்மாதம் 10ம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் 11ம் திகதி அதிகாலை 4.00 மணிவரை கல்லடிப்பலாத்தினூடாக எதுவித போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த 6 மணி நேரத்துள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் பயணிப்பவர்கள் வேறு வீதிகளினூடாக பயணித்தல் வெண்டும்.

மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் குறித்து கூடிய கவனம்

Image
145 பேர் இறந்துள்ளதாக அமைச்சு தகவல் இடைப்பருவப் பெயர்ச்சி மழையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு கூறியது. கடந்த 10 மாத காலத்தில் நாடுபூராவும் 20,753 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் 145 பேர் டெங்கு நோயினால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஜுலை மாதத்திலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த மாதத்தில் 4781 பேர் அடையா ளங்காணப்பட்டனர். ஆனால் கடந்த காலத்தில் நாடுபூராவும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரம் காரணமாக டெங்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் அநேகமான பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதையடுத்து மீண் டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கோரியுள்ளது. டெங்கு காரண மாக மேல் மாகாணத்திலே அதிகமான வர்கள் இறந்துள்ளனர். 58.1 வீதமானவர்கள் இப்பகுதியில் இறந்துள்ளனர்.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும்

Image
துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (27) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில்  அகில இலங்கை ஜமியதுல் உலமாசபை, முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள்இ ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இன்று நாட்டின் எப்பாகத்திலும் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் துல்கஃதா மாதத்தினை முப்பதாக நாளை நிறைவு செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகின்றது என்ற தகவலை  கூடிய பிறைக்குழு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு

Image
கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஸ் ஹோட்டலில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களது ஏற்பாட்டில் நடை பெற்றது. இங்கு தேர்காலத்தின்போது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்புக்களை மறந்து கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அணைவரும் உழைக்குமாறு பா.உ வேண்டுகோள் விடுத்தார்.

சாய்ந்தமருதில் திவிநேகும வேலை திட்டம்

Image
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் ' திவி நெகும ' மனைப்பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது பிரதேச வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் மத்தியில் பயிர்ச்செய்கையினை ஊக்குவித்து அவர்களின் பொருளாதார நிலமையினை உயர்த்துவதுடன் நச்சற்ற போசாக்குள்ள உணவுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் இ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் இ சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோஸ்தர்களான ஏ.பி.எம்.அஸ்ஹர் இ ஏ.எல்.ஏ.மஜீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம்

Image
கல்முனை மாநகர சபையை கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில், கொழும்பு 12 இல் அமைந்துள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

நற்பிட்டிமுனை கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.எஸ் பரீட்சையில் சித்தி

Image
நற்பிட்டிமுனை கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.எஸ் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார் . நற்பிட்டிமுனை எம்.ஆசீக் என்பவரான முனை பிர தேச செயலகத்தில் கிராம சேவகராக கடமை புரியும் இவர் மர்ஹூம் ஏ.எல்.எம். பளீல் பிர தேச செயலாளரின் மருமகனாவார் .

அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் எனும் நூலின் வெளியீடு; கல்முனை மேயருக்கு "மருதமணி பட்டம்"

Image
பிரபல பன்னூலாசிரியரும் ஊடகவியலாளருமான சாய்ந்தமருது எம் எம் எம் நூறுல் ஹக் எழுதிய 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மெட்ரோ மிரர் செய்தி இணையத்தள முகாமைத்துவ ஆசிரியர் செயிட் அஸ்லம் எஸ்.மௌலானா தொடக்கவுரையையும் கவிஞர் நவாஸ் சௌபி நூல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர். அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப், மருதம் கலை இலக்கிய வட்டத்தினால் "மருதமணி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அமைப்பின் தலைவர் ஏ.எம்.நஸீர், தவிசாளர் நவாஸ...