மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே
அமைச்சர் ரிசாத் கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் 11 வருட காலம் அபிவிருத்தியின்றி காணப்படும் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தியினை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி முதல் எமது கட்சி பொறுப்பெடுக்கும் என பிரகடனம் செய்தார். கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடி முற்சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மாநகர சபை வேட்பாளர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:- இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியினை மாற்றி எழுதிய பெருந் தலைவர் மர்ஹ¥ம் அஷ்ரப் பிறந்த இந்த மண்ணான கல்முனை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக பூமியினை தற்போது பார...