Posts

A.R.A .அஸீஸ் காலமானார்

Image
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி முன்னாள்  பீடாதிபதி ஏ.ஆர்.ஏ.அஸீஸ்  நேற்று இரவு மருதமுனையில் காலமானார். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை மருதமுனையில் இடம் பெறும்

பத்து எச்சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லை ;

Image
  விசாரணை ஆரம்பம்   சுமாத்ரா தீவுக் கருகில் ஏற்பட்ட நில நடுகத்தையடுத்து இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக் கப்பட்ட போதும் 10 சுனாமி முன்னெச் சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லையென விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியது. இவற்றைத் திருத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷியா வின் சுமாத்ரா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள், ஊடகங்கள், பொலிஸார் ஊடாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன்போது 90 வீதமான கோபுரங்கள் இயங்கியதோடு நீர்கொழும்பு, மாத்தறை, கம்பஹா, சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கலான பல இடங்களில் அவை செயற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை கோபுரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சு பணித்திருந்தது. நாடு பூராவும் உள்ள 74 கோபுரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 10 கோபுரங்கள் இயங்காதது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்ப

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள

Image
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 12 தினங்கள் இடம்பெறவுள்ள மேற்படி கொடியேற்றத்தின் போது மார்க்க அறிஞர்களால் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட உள்ளதுடன் இறுதி நாள் அன்று கந்தூரி வைபவமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றத்தினை முன்னிட்டு கல்முனை இ.போ.ச. சாலையினால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அடுத்த முதலமைச்சரும் நானே என்று சவால் விடுகிறார் பிள்ளையான்

Image
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு மூவின மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற நானே பொருத்தமானவன் என தற்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உறுதிபடத் தெரிவித்துள்ளார். இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன். எந்தவொரு நபரும் தமக்கு போட்டியாக அமைய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளை இந்த ஆண்டில் கலைத்து விட்டு தேர்தல் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிழக்கில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்களில் ஈடுபடுவோர் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். கிழக்கு மாகாணம் அபிவிருத்திப் பாதையில் செல்வதனை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட நான் பின்வாங்க மாட்டேன். என்னுடன் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும். எனினும் வெற்றியீட்டப் போவது நானே' என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

வாகன விபத்தில் நூரானியா ஹசன் மரணம்

Image
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின வர்த்தக பிரிவு பணிப்பாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.பௌசுல் ஹசன் (நூரானியா ஹசன்) இன்று அதிகாலை விபத்து ஒன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார். இன்று அதிகாலை ரம்பாவெல- மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கியே இவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இவருடன் பயணித்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை சேர்ந்த மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4.00 மணியளவில் மிஹிந்தலை - ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் வான் மோதியதாலேயே இவ்விவத்து சம்பவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மாவனல்லையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் நூரானியா ஹசன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின வர்த்தக முகாமையாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் நூரானியா ஹசன் அவர்களின் திடீர் மறைவு குறித்து மேல் மாகாண ஆளுநர் அளவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்

சாய்ந்தமருதில் பெண் ஒருவர் தீப்பிடித்து உயிரிழப்பு

Image
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மின் ஒழுக்கு தீ விபத்து காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா (வயது36) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயாவார். இன்று மதியம் தனது வீட்டுக் குளியலறையில் மின் இயந்திரத்தில் உடு துணிகளைத் துவைக்கும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கினால் அவர் தாக்கப்பட்டதுடன் இயந்திரம் சகிதம் அவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

கிழக்கு முதல்வராக அந்த மாகாணத்தவரே வரவேண்டுமென்ற வரையறை இல்லை: எஸ்.எம்.ஏ.கபூர்

Image
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த மாகாண மண்ணில் பிறந்தவராகவோதான் இருக்க வேண்டும் என்கிற நியதிகளோ, வரையறைகளோ இல்லை.  கிழக்கு மகாணத்தில் பிறந்தவர்கள்தான் - அந்த மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று அண்மையில் கூறப்பட்ட கருத்தானது தனிப்பட்ட ஒரு நபரின் அபிப்பிராயமேயன்றி, அது கிழக்கு மக்களின் முடிவல்ல' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளரும் அக்கட்சியின் உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ 'கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதன் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற நிபந்தனையினை தனிநபரொருவர் வெளியிட்டுள்ளார். ஆனால், கிழக்கின் முதலமைச்சராக அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வரவேண்டும் என்று - கிழக்கு மக்கள் ஒருபோதும் மல்லுக்கட்டியதில்லை.   கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அரசு சார்பான பொது வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்து

கொழும்பில் ரி.வி கெமரா வாகனம் !

Image
பொலிஸாரின் புதிய நடவடிக்கை  - கொழும்பு மா நகரில் சி.சி.ரி.வி. கெமரா பொருத்தப்பட்ட வாகனங்களின் நடமாடும் சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சி.சி.ரி.வி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

Image
இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வைச் சந்தித்து  உரையாடினர். இக்குழுவினர் இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐனநாயக மக்கள் முன்னணியையும் சந்திக்கவுள்ளதhக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாராளுமன்றத்துக்குச் சென்ற குழுவினர்  சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்வையும் சந்தித்தனர். 

கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும்; மு.கா. பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறுகிறார்!

Image
கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறியுள்ளார். அதேவேளை கிழக்கின் முதலமைச்சராக இம்முறை இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகன் ஒருவருக்கு இடமளிக்க தமிழ் சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற MCAS கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கௌரவ அத்தியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இக்கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; 'மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நாட்டின் பல பகுதிகளிலும் தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். அந்த வகையில் தான் இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமை அன்று கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கி, தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததுடன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் அமர்த்தினார். அதேவேளை தலைவர் எம்.எ

Happy New Year

Image

சுனாமி எச்சரிக்கை வாபஸ்; மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம்

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 18:34 இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பூகம்பங்களையடுத்து இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் வீடுகளுக்குத்  திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரையோர வைத்தியசாலை மருத்துவ உத்தியோகஸ்தர்களின் விடுமுறை ரத்து

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 16:50 கரையோர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரநிலைமைகளுக்கு முகம்கொடுக்க தயாராக இருப்பதற்காக மருத்துவ ஊழியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இதேவேளை உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோர பிரதேசங்களிலுள்ள குறிப்பாகஇ தெற்கு, கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா திணைக்களம் கோரியுள்ளது. 

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கையிலும் அதிர்வு உணரப்பட்டது

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 14:52 இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் சற்றுமுன் 8.9 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்துசமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இப்பூகம்பத்தினால் இலங்கையின் கிழக்கு. மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலின் அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளருக்கு காப்புறுதி கட்டாயம்

Image
தவறினால் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தம்மையும் தமது வள்ளங்களையும் காப்புறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்புறுதி செய்ய தவறும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்களென மீன்பிடித்துறையமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். தற்போது முதல் காப்புறுதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை அடுத்த வருடம் ஆரம்பம் முதல் இச்சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி வருடமொன்றுக்கு 750 ரூபாவினை காப்புறுதியாக செலுத்தும் மீனவர்களுக்கு நட்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவும் வருடத்துக்கு 1500 ரூபாவினை காப்புறுதியாக செலுத்துபவர்களுக்கு நட்டஈடாக 03 இலட்சம் ரூபாவும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கையை கடந்து சென்ற ‘தானே’ சூறாவளியினால் இலங்கை மீனவர்கள் 25 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நேற்று நட்டஈடு வழங்கி வைத்தார். இந்நிகழ்வு நேற்று கால

மாலைவேளைகளில் இடி, மின்னலுடன் கடும் மழை; எச்சரிக்கை

Image
மாலை வேளை களில் மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால், அது குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மூவர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையை அண்டிய பகுதிகளில் நாட்டின் அநேகமான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் திறந்தவெளிகள், மரத்தடிகள் என்பவற்றில் இருப்பதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் உபகரணங்கள் பாவிப்பதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த வருடம் மின்னல் தாக்கி 51 பேர் இறந்துள்ளதோடு, கடந்த 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெற்று கதிரை அதிகம் காணப்பட்ட ரவுப் ஹகீம் கூட்டம்

வீடியோ  காட்சி  மருதமுனையில் நடை பெற்ற தபாலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ரவுப் ஹகீம் கலந்து கொண்ட கூட்டத்தில் மருதமுனை மக்கள் மண்டபத்தில் வெற்று கதிரைகளே அதிகம் காணப்பட்டது . இது முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை என வர்ணிக்கப் படும் மருதமுனையில் காணப்பட்டதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வீழ்ச்சிக்குரிய அடித்தளம் என பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி அதவுல்லாவினால் அடிக்கல் நடப்பட்ட இக்கட்டிடம் திறந்து வைப்பதற்கு ஹக்கீமுக்கு அருகதை  இல்லை என முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுள் ஒருவரான சட்டத்தரணி தெரிவித்தார் .

நண்பகல் 12.12 க்கு இன்று சூரியன் உச்சம்

Image
* மட்டு. பாலமீன்மடு, * களேவெல, * நிக்கவரெட்டிய மட்டக்களப்பு, பாலமீன்மடு, களேவெல மற்றும் நிக்கவெரட்டிய ஆகிய பிரதேசங்களில் நேரே இன்று 09 ம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் மெரில் மெண்டிஸ் நேற்றுத் தெரிவித்தார். நண்பகல் 12.12 மணிக்கு மேற்படி பிரதேசங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, அம்பாறை, காரைதீவு, அக்குறணை, கலகெதர, கட்டுநேரிய ஆகிய பிரதேசங்களில் நேரே சூரியன் நேற்று நண்பகல் 12.12 மணிக்கு உச்சம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். வருடா வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையும் சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுப்பது வழமையாகும். அந்தடிப்படையில் இந்தக் காலப் பகுதியில் தினமும் வெவ்வேறு பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கின்றது. இந்தக் காலப் பகுதியில் இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுப்பதால் வெப்பம் சிறிதளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருதமுனை புதிய தபாலக கட்டிடம் திறப்பு

Image
மருதமுனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலக கட்டிடம் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர், தபால் திணைக்கள அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், உமரலி, ஏ.அமீர், ஏ.எம். பறக்கத்துல்லா ஏ.ஏ.பஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இந்த தபாலக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எஸ். மூலம் தண்டப்பணம் செலுத்தும் புதிய நடைமுறை

Image
வாகன சாரதிகளின் வசதிகருதி அறிமுகம் வாகன சாரதிக ளுக்கு எஸ். எம். எஸ். ஊடாக தண்டப் பணம் செலுத்தும் புதிய நடைமுறையொன்றை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தவுள் ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப் பணம் செலுத்துவதற்காக போக்குவரத்து பொலிஸார் அபராத பத்திரம் வழங்குவார்கள். இதனை அருகிலுள்ள தபாலகத்தில் செலுத்தி அவர்களினால் வழங்கப்படும் பணம் செலுத்திய ரசீதை மீண்டும் போக்குவரத்து பொலிஸாரிடம் காண்பித்து தமது சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையினால் சாரதிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்குகி ன்றனர். குறிப்பாக கொழும்பிலுள்ள சாரதி ஒருவர் மாத்தறைக்கு செல்கையில் அங்கு அவர் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காக போக்குவரத்துப் பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டால் அவர் தபாலகம் ஒன்றை தேடிச் செல்ல வேண்டும். பயணத்தின் அவசரம் காரணமாக தண்டப் பணத்தை பிறகு செலுத்தலாம் என அவர் பயணத்தை தொடர்ந்தால் தண்டப் பணத்தை செலுத்துவதற்காக மட்டும் அவர் மாத்தறை செல்ல வேண்டும். இதனை தடுக்கும் நோக்கிலேயே இப் புதிய

மருதமுனை வீட்டு திட்டம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

Image
அரச அதிபர் தெரிவிப்பு  “சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை 65 மீற்றருக்குட்பட்ட  மக்களின் வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை மாவட்ட செயலாளராகிய நான் நன்கு அறிந்துள்ளமையினால் பிரதேச செயலாளரை விடுத்து எனது நேரடிப் பொறுப்பிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கையளிக்க நடவடிக்கை எடுப்பேன்.” இவ்வாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. அல்விஸ் தெரிவித்தார். வீடுகளைக் கைளயிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பில் மருதமுனை 65 மீற்றருக்குட்பட்டோர் அமைப்பினரின் செயற்பாட்டில் அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார். நேற்று புதன் கிழமை (04.04.2012) அம்பாரை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாவட்ட செயலாளருடன் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எல். அன்வர்டீன் அவர்களும் கலந்து கொண்டார். மருதமுனையின் சார்பில் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.எல்.எம். ஹனீபா மௌலவி, சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ். ஜலால்தீன் மௌலவி, பொறியியலாளர் நஸ்றுல் கரீ

கல்முனையில் திவிநேகும

Image
k`pe;j rpe;jid Ntiyj;jpl;lj;jpf; fPo; nghUshjhu mgptpUj;jp mikr;rpd;  “ jptpneFk  –  tho;T vOr;rp ”   %d;whk; fl;lk; 2012 fy;Kidapy; ,d;W tpahof;fpoik ,lk;ngw;wJ. epiwthd ,y;yk; - tskhd jhafk; vd;w njhdpg;nghUspy;   fy;Kidf;Fb  –  11>12>13>14 Mfpa fpuhkNrtfu; gpupTfspy; Muk;g;gpf;fg;gl;l ,e; epfo;tpy; gpujk mjpjpahf fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`; fye;J nfhz;lhu;. ,NjNtis Fwpj;j fpuhkNrtfu; gpupTfspy; trpf;Fk; gadhspfSf;F kuf;fd;WfSk;> kuf;fwp tpijfSk; gpujk mjpjpahf fye;J nfhz;l fy;Kid khefurig cWg;gpdu; V.vk;.gwf;fj;Js;sh`;tpdhy; toq;fg;gl;lJ. ,e;epfo;tpy; mYtyu;fs;> fpuhkNrtf cj;jpNahfj;ju;fs;> rKu;j;jp mgptpUj;jp cj;jpNahfj;ju;fs;> gadhspfs;> gpuNjrthrpfs; kw;Wk; gyu; fye;Jnfhz;ldu;.

கிண்ணியா கடற்கரையோரம் பாம்புகள் படையெடுப்பு

Image
வீடியோ காட்சி  கிண்ணியா கடற்கரையோரப் பகுதி களுக்கு பெருந்தொகையான பாம் புகள் படையெடுக்கின்றன. விசேடமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தின் இரு மருங்கிலும் இலட் சக்கணக்கான பாம்புகள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் பெருந் திரளான மக்கள் இதனைப் பார்வையிடு வதற்காக அங்கு கூடியுள்ளனர். இரவு வேளையாயிருந்தாலும் பாம்புகளைப் பார்ப்பதற்காக மக்கள் கூடியுள்ளதால் பாதைகளில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது

பெரிய நீலாவணை ஸ்ரீ விஸ்ணு தேவஸ்தான புனரவர்தன மகா கும்பாபிசேகம்

Image

கல்முனை இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை பகிஸ்கரிப்பு

Image
சம்பள அதிகரிப்பு கோரி இன்று பகல் கல்முனை இலங்கை வங்கி ஊழியர்கள் ஒரு மணித்தியாலம்   வேலை பகிஸ்கரிப்பு செய்து வங்கி வாசல் முன்பாக நிற்பதை காணலாம்.