வாகன விபத்தில் நூரானியா ஹசன் மரணம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின வர்த்தக பிரிவு பணிப்பாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.பௌசுல் ஹசன் (நூரானியா ஹசன்) இன்று அதிகாலை விபத்து ஒன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை ரம்பாவெல- மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கியே இவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இவருடன் பயணித்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை சேர்ந்த மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் மிஹிந்தலை - ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் வான் மோதியதாலேயே இவ்விவத்து சம்பவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மாவனல்லையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் நூரானியா ஹசன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின வர்த்தக முகாமையாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் நூரானியா ஹசன் அவர்களின் திடீர் மறைவு குறித்து மேல் மாகாண ஆளுநர் அளவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், செனட்டர் மசூர் மௌலானா, முன்னாள் ஊடகத்துறை பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்களும் ஊடக முக்கியஸ்தர்களும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment