கடற்றொழிலாளருக்கு காப்புறுதி கட்டாயம்
தவறினால் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும்
கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தம்மையும் தமது வள்ளங்களையும் காப்புறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்புறுதி செய்ய தவறும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்களென மீன்பிடித்துறையமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
தற்போது முதல் காப்புறுதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை அடுத்த வருடம் ஆரம்பம் முதல் இச்சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி வருடமொன்றுக்கு 750 ரூபாவினை காப்புறுதியாக செலுத்தும் மீனவர்களுக்கு நட்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவும் வருடத்துக்கு 1500 ரூபாவினை காப்புறுதியாக செலுத்துபவர்களுக்கு நட்டஈடாக 03 இலட்சம் ரூபாவும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கையை கடந்து சென்ற ‘தானே’ சூறாவளியினால் இலங்கை மீனவர்கள் 25 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நேற்று நட்டஈடு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு நேற்று காலை வெலிகமயில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியபோதே மீனவர்களது கட்டாய காப்புறுதி திட்டம் குறித்து மேற்படி
Comments
Post a Comment