யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அடுத்த முதலமைச்சரும் நானே என்று சவால் விடுகிறார் பிள்ளையான்


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு மூவின மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற நானே பொருத்தமானவன் என தற்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன். எந்தவொரு நபரும் தமக்கு போட்டியாக அமைய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளை இந்த ஆண்டில் கலைத்து விட்டு தேர்தல் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கிழக்கில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்களில் ஈடுபடுவோர் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். கிழக்கு மாகாணம் அபிவிருத்திப் பாதையில் செல்வதனை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட நான் பின்வாங்க மாட்டேன். என்னுடன் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும். எனினும் வெற்றியீட்டப் போவது நானே' என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்