மருதமுனை புதிய தபாலக கட்டிடம் திறப்பு

மருதமுனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலக கட்டிடம் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர், தபால் திணைக்கள அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், உமரலி, ஏ.அமீர், ஏ.எம். பறக்கத்துல்லா ஏ.ஏ.பஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இந்த தபாலக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்