மாலைவேளைகளில் இடி, மின்னலுடன் கடும் மழை; எச்சரிக்கை
மாலை வேளை களில் மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால், அது குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மூவர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையை அண்டிய பகுதிகளில் நாட்டின் அநேகமான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் திறந்தவெளிகள், மரத்தடிகள் என்பவற்றில் இருப்பதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் உபகரணங்கள் பாவிப்பதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மின்னல் தாக்கி 51 பேர் இறந்துள்ளதோடு, கடந்த 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments
Post a Comment