சாய்ந்தமருதில் பெண் ஒருவர் தீப்பிடித்து உயிரிழப்பு


சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மின் ஒழுக்கு தீ விபத்து காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா (வயது36) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.

இன்று மதியம் தனது வீட்டுக் குளியலறையில் மின் இயந்திரத்தில் உடு துணிகளைத் துவைக்கும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கினால் அவர் தாக்கப்பட்டதுடன் இயந்திரம் சகிதம் அவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்