Posts

18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள்

Image
18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. 1. ௭ப்.பீ.சீ ஹேரத் – மக்கள் தொடர்புகள் அமைச்சு 2. அனுர சிறிவர்தன – கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை 3. வைத்தியர் நிஹால் –சுகாதார அமைச்சு 4. வைத்தியர் ரூபேரு –சிவில் விமான சேவைகள் அமைச்சு 5. ௭ன்.பந்துசேன –அரச முகாமைத்துவ புனரமைப்பு அமைச்சு 6. டீ.அமரவர்தன –கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு 7. ஆர்.செனவிரத்ன –திறன் அபிவிருத்தி மேம்பாட்டு அமைச்சு 8. லலித் கன்னங்கர –தேசிய வைத்தியத்துறை அமைச்சு 9. ஏ.நிஹால் சோமவீர –தெங்கு அபிவிருத்தி அமைச்சு 10. வசந்த ஏக்கநாயக்க – கலாசார,கலை நடவடிக்கை அமைச்சு 11. ௭ப்.பெரேரா –நிர்மாண, பொறியியல் சேவை அமைச்சு 12. ௭ம்.ஜயவிக்ரம –விளையாட்டுத்துறை அமைச்சு 13. ஏ.இமெல்டா சுகுமார் –சமூக சேவைகள் அமைச்சு 14. பீ.சுகததாஸ –மீள் குடியேற்ற அமைச்சு 15. கே.ரணவக்க – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு 16. ஷரித்த ஹேரத் –ஊடகத்துறை அமைச்சு 17. பீ.திஸாநாயக்க –பௌத்த,மத அலுவல்கள் அமைச்சு 18. கே...

கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு புதிய கணக்காளர்

Image
கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு புதிய கணக்காளர் நியமிக்கப் பட்டு நேற்று வெள்ளிகிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் .கல்முனை அஸ்ரப் வைத்திய சாலை கணக்காளர் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து  நீதி மன்ற கட்டளை பிரகாரம் முன்னாள் கணக்காளர் இடை நிறுத்தப்பட்டு புதிய கணக்காளரான அம்பாறை போலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமை புரிந்த எஸ்.எம்.சரீப் நியமிக்கப் பட்டுள்ளது . புதிய கடமைகளை பொறுப்பேற்ற கணக்காகளர் சரீபுக்கு வைதிதியட்சகர் நசீர் தலைமையில் வரவேற்ப்பு விழாவும் நடை பெற்றது .

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு 183 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு

Image
தேசத்திற்கு மகுடம் என்ற தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு    அமயை அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் அபிவிவித்தி செய்யப்படவுள்ளது. 2013ம் ஆண்டிற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியானது அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவிருப்பதனால் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு 108 மில்லியன் ரூபாவும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு 183 மில்லிய ன்  ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதிகள் சனத்தொகை அடிப்படையில் ஒதுக்கீட்டு தொகைகள்  தீர் மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் குறித்த நிதியினை எவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு நிதியீட்டினை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13.07.2012) வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும், மாலை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.  திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தல...

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒப்பந்த அடிப்படையில் அரசுடன் முகா இணைந்து போட்டி

Image
அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதென நேற்று இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த தீர்மானத்தை முன் வைத்தார். அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இடம்பெற்ற சந்திப்பு பற்றியும் அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த இணக்கம் பற்றியும் உயர்மட்ட குழுவுக்கு விளங்கப்படுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர்மட்ட குழு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதென ஏகமனதாக தீர்மானம் எடுத்தது. இத்தீர்மானத்துக்கு இணங்க அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு 277097 பேர்!

Image
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 77ஆயிரத்து 97 பேர் விண்ணப்பித்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.என்.எம்.ஜே.குமாரசிறி தெரிவித்தார்.  பழைய பாடதிட்டத்தின் கீழ் 41323 பேரும் புதிய பாடதிட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் 220535 பேரும் இவ்வாறு  விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்   தெரிவித்தார்.  இதேவேளை தனிப்பட்ட ரீதியில் 15239 பேரும் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தே போட்டியிடும்

Image
அமைச்சர் பஷில் கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் ௭ன்றே நம்புகின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ௭ன்பது ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும். ௭னவே தேர்தல் ௭ன்று வரும்போது அக்கட்சி ௭ம்முடனேயே இணைந்து கேட்கும் ௭ன்று கருதுகின்றோம்.  அவ்வாறு தான் இதுவரை காலமும் செயற்பட்டுவந்துள்ளோம். அதனை அடிப்படையாகக்கொண்டே நகர்வுகள் இடம்பெறுகின்றன. இதேவேளை ஆளும் கட்சியுடன் இணைந்து கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளை அரசாங்கத்துக்கு விதித்துள்ளதாக ௭னக்கு இதுவரை தெரியவரவில்லை. ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் மிகவும் நம்பிக்கையுடன் நாங்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கடந்த முறை போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக...

TNA-SLMC முறிவு

Image
கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார். அந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால், இன்றுவரை தனித்து போட்டியிடுவது என்கிற முடிவையே தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் கட்சியில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் பொன் செல்வராஜா தெரிவித்தார்; இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் பட்சத்தில், தம்மால் தனியாக அங்கு ஆட்சி அமைக்க முடியுமா என்கிற கேள்விகளும் இருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சம அளவில் வாழ்ந்து வரும் சூழலில், தனித்தே ஆட்சி அமைக்க முடியும் என்று தமது கட்சியால் முற்றுமுழுதாக நம்பிவிட முடியாது என்றும் அவர் கூறினார். எனினும் மற்ற கட்சிகளிட...

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளுடனையே ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும்..?

Image
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் நிபந்தனைகளுடன் மாத்திரமே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட வேண்டும் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று புதன்கிழமை அதிகாலைவரை நீடித்த இந்த அதியுயர்பீடக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவி எமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டால் முதலமைச்சர் பதவி பிரதான நிபந்தனையாக அதில்  இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளளார். இத...

கல்முனைஇஸ்லாமாபாத் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமாபாத் கிராமத்தின் அக்பர் ஜும்ஆப்பள்ளிவாசலில் இன்று  டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்று இடம்பெற்றது. டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நோக்கோடு இஸ்லாமாபாத் யங் மௌண்ட் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  அதன் தலைவர் ஏ.எம்.ஏ.றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இச்சிரமதானத்தில் கல்முனை பிராந்திய இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ. முபாறக் அலி உட்பட கழகத்தின் அங்கத்தவர்களும்  மற்றும் இக்கிராமத்தின் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பேரியல் அஷ்ரப்

Image
கிழக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என முன்னாள் அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் தற்போதய சிங்கப்பூர் நாட்டுக்கான தூதுவரமான ஜனாபா பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நான் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் என்னம் கிடையாது. அதற்கான வாய்ப்புமில்லை. நான் தற்போது சிங்கப்பூர் நாட்டுக்கான தூதுவராக கடமையாற்றுகின்றேன். எனது பெயரும் அடிபடலாம் காலத்துக்காலம் இவ்வாறான தேர்தல்கள் வரும் போது பெயர்கள் அடிபடுவது வழக்கமாகும். நான் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை குடி பள்ளி வீதி வடிகான் அபிவிருத்தி

Image
கல்முனை குடி  பள்ளி வீதி  வடிகான்  புர நெகும  திட்டத்தில் 5.2மில்லியன் செலவில் நிர்மாணிக்கப் படவுள்ளது .இதன் ஆரம்ப பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் பரகதுல்லா உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்  

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்கள் சாதனை

Image
கல்முனை கல்வி வலயத் திலுள்ள கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாண வர்கள் பலர் கிழக்கு மாகாண மட்டத்திலான மெய்வல் லுனர் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண் டாம், மூன்றாம் இடங்க ளைப் பெற்று மீண்டும் இப் பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இதற்கமைய கே. தனுசியா என்ற மாணவர் 21 வயதுக் குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டிக ளில் முதலாம் இடங்க ளைப் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள் ளார். இதே போன்று ஐ. இதய ராகிணி என்ற மாணவி 21 வயதுக்குட்பட்ட பெண்க ளுக்கான 100 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டி யில் இரண்டாம் இடத்தி னைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினையும், 400 மீற்றர் தடைதாண்டல் போட்டி யில் மூன்றாம் இடதினைப் பெற்று வெங்கல பதக்கத் தையும் வென்றுள்ளார். கிஸ்சன் ராஜ் என்ற மாணவன் பரிதிவட்டம் வீசுவதில் 2ம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத் தையும், வீ. கர்சனா என்ற மாணவி ஈட்டி எறிதலில் 4ம் இடத்தையும் பெற்றுள் ளார். மேற் கூறப்பட்ட மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர். பெரு விளையாட்டுக்க ளின் அடிப்படையில் உடற் ...

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டம்

Image
சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்டங்களை அமுல்படுத்துவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளியே செல்ல முடியாதளவுக்கு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். அது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் நீதி அமைச்சுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.தற்போது நாட்டில் அதிகரித்திருக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  விசேட திட்டங்கள் அமுல் நடத்தப்படுமென்றும் கூறினார்.  பிள்ளைகள் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோருக்கு உள்ளது. எனவே சிறுவர் துஷ்பிரயோகங்களை மற்றும் அவற்றிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது குறித்து பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் அதிகரித்திருக்கும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தி அவற்றை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ...

அம்பாறை மாவட்டத்துக்கு புதிய அமைப்பாளர் நியமனம்!

Image
அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கையளித்தார். களணிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற இவர் தமது ஆரம்பக் கல்வயை அம்பாறை சதாதிஸ்ஸ மகா வித்தியாலயத்தில் பெற்றார் பலதுறைகளிலும் உயர் பதவிகளை வகித்துள்ள இவர் தற்போது புத்தசாசன மற்றும் சயம விவவார அமைச்சின் இணைப்புச் செயலாளராப் பணிபுரிந்து வருகிறார்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” ஆரம்பம்

Image
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” சேவை எதிர் வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஆறாம் இலக்க கலையகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் இடம்பெறவிருப்பதாக இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார். இதன்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் உயர் பதவிகள் வகித் பேராசிரியர் மர்கூம் டொக்டர் உவையிஸ், ஏ.எம்.காமில் மரைக்கார், வி.ஏ.கபூர், எம்.சி.கபூர், எம்.எஸ்.குத்தூஸ், மௌலவி.இஸட்.எல்.எம்.முஹமட், நூராணியா ஹஸன் மற்றும் ஒலிபரப்பு முன்னோடியும் தயாரிப்பாளருமான எம்.ஏ.எம்.முஹமட் ஆகியோரின் குரல்ஒலிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. மேற்படி நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொள்ள இருப்பதாகவும் மேற்படி நிகழ்வினை கண்டுகளிக் விரும்புபவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அங்குரார்ப்பன நிகழ்வினை நேரடி உலிபரப்புச் செய்யவுள்ள...

முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடு ஏற்படுவதை விரும்புகிறோம்: சம்பந்தன்

Image
எமக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஓர் இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இது விடயமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் நாம் தெரிவித்திருக்கின்றோம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று திருகோணமலையில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், 'நடக்கவிருக்கும் கிழக்கு  மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான  ஒன்றாகும்.  வடக்கு  கிழக்கு  பிரிக்கப்பட்டிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமான...

அம்பாறை மாவட்டத்தில் 441,287 பேர் வாக்களிக்கத் தகுதி

Image
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 441,287 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.அர்ச்சுதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதியில் 153,079 வாக்காளர்களும், பொத்துவில் தொகுதியில் 144,329 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 75,640 வாக்காளர்களும், கல்முனைத் தொகுதியில் 68,239 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் பதினான்கு  உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்கு 464 வாக்களிப்பு நிலையங்களும் 29 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப் படவுள்ளது 

நோன்பு காலத்தை தவிர்த்து பிறிதொரு தினத்தில் தேர்தல்

Image
ஆணையாளரிடம் ஹுனைஸ் MP கோரிக்கை கிழக்கு மாகாண சபைத்தேர்தலை நோன்பு காலத்தை தவிர்த்து பொருத்தமான தினத்தில் நடத்துமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹ¥னைஸ் பாரூக் எம்.பி தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாநாட் டின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்தார். தேர்தல் காலத்தில் நோன்பு வருவதால் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முஸ்லிம்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே தேர்தலை செப்டம்பர் 15ஆம் திகதியளவில் நடத்த ஆவன செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தபோது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையாளர் உறுதியளித்தார். இதேவேளை செப்டம்பர் 1ஆம், 8ஆம், 15ஆம் திகதிக ளில் ஏதாவதொரு தினத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.

முக்கூட்டு சிக்கறுக்கலாமா?

Image
தமக்குள் கூட்டணி அமைத்து ஒருமித்த குரலில் அரசுடன் பேச்சு நடத்த முடிவு கிழக்கில் வலுப்பெற்றுவரும் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை; பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லை எனவும் தீர்மானம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலை யில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி களான முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சியும் முதலமைச்சர் கோரிக்கையில் ஒருமித்து செயற் படுவதெனவும், தேர்தல் பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லையெனவும் முடிவெடுத்துள்ளன. அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்தக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், ஹுனைஸ் பாரூக் எம்.பி, அஸ்லம் எம்.பி, வை.எல்.எஸ்.ஹமீட் சட்டத்தரணி என்.எம்.சஹீட் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்...

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க காத்தான்குடி பேரீத்தம் பழத்தை சுவைத்துப் பார்த்தார்

Image
முக்கிய நிகழ்வொன்றுக்காக மட்டக்களப்புக்கு இன்று (02.07.2012) விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க,காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்துக் குலுங்கும் 27 ஆம் இலக்க பேரீத்த மரத்தின் பழங்களை தாமாகவே ஆய்ந்து சுவைத்துப் பார்த்தார். கல்வி அமைச்சருடன் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வி. முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட கல்வி அமைச்சருக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலய மஜ்லிஸில் அரபுநாட்டு முறையில் உபசரிப்புகள் இடம்பெற்றன. இதேவேளை, அமைச்சர் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில்சுகாதாரமும் போசாக்கும்’ கருத்தரங்கு!

Image
நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுகாதாரமும் போசாக்கும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கானது இகல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் போசாக்கினை பேணும் நோக்குடன் பெற்றோர்களுக்காக நடாத்தப்பட்டது. அத்துடன் மாணவர்களின் போசாக்கினை அதிகரிப்பதற்காக நாம் எவ்வாறான உணவு வகைகளைப் பிள்ளைகளுக்கு தயாரித்து ஊட்டவேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்:எம்.ஏ.சீ.ஏ.பஸால், கல்லூரியின் முகாமையாளர் எம்.எம்.றியாஸ், இணைப்பபாளர் ஏ.ஆர் பைறூஸ்கான் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதன்போது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.

கலைக்கப்பட்ட மாகாணசபை முதலமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Image
மாகாணசபைகள் கலைக்கப்பட்டபோது முதலமைச்சர்களாக இருந்தவர்களையே கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை கூறியது.  இந்த தீர்மானத்துக்கமைய சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் தத்தம் மாகாணங்களில் ஐ.ம.சு.கூ அணிகளுக்கு தலைமை தாங்குவர்.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் அவற்றுக்காக ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளரான சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.  ஐ.ம.சு.கூட்டமைப்பில் ஆகவும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த தேர்தலுக்காக புனரமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய சுசில் பிரேமஜயந்த, முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களே மீண்டும் பிரதம வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டார். 

எம்.எச்.எம்.அஷ்ரப் தொடர்பில் ரிவிர வெளியிட்ட செய்திக்கு றிசாத் கண்டனம் _

Image
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்து சிங்களப் பத்திரிகையான ரிவிர வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தினைப் புண்படுத்துவனவாக அமைந்துள்ளதுடன்,ஒருவர் மரணித்த பின்னர் அவர் மீது அவதூறு கூறுவதை சகோதரத்துவத்தை விரும்பும் இஸ்லாம் கண்டிக்கின்றது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரிவிர ஞாயிறு பத்திரிகையின் 27 ஆம் பக்கத்தில் எச்.டபிள்யூ.அபயபால என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தை வாசிக்கும் போது அது உண்மைக்கும்,மனித அறிவுக்கும் பொருத்தமற்றதாக உள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார். கதிர்காமத்தில் சிறுவன் ஒருவன் பௌத்த விகாரையில் வைத்து எதிர்வு கூறியதாக இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் நம்பகத்தன்மைக்குரியதல்ல என்பதையும் இது வெறும் கட்டுக் கதையொன்றே எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.இவ்வாறு ஒவ்வொருவரும் எதிர்வு கூறல்களைச் செய்தால் இந்த நாடு குறித்து பெரும்கேள்வியே எழுந்திருக்க வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்த வரைய...

ஜுலை 19 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்!

Image
கலைக்கப்பட்ட கிழக்கு- சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேரதலுக்கான வேட்பு மனுக்களை எதிர்வரும் ஜூலை 12 தொடக்கம் 19ம் திகதிவரை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கிழக்கு- வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண  சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை தெரிந்ததே.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

Image
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதினால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை எம்.பி. மேலும் கூறினார்.