கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு 183 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு
தேசத்திற்கு மகுடம் என்ற தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமயை அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் அபிவிவித்தி செய்யப்படவுள்ளது.
2013ம் ஆண்டிற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியானது அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவிருப்பதனால் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு 108 மில்லியன் ரூபாவும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு 183 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதிகள் சனத்தொகை அடிப்படையில் ஒதுக்கீட்டு தொகைகள் தீர் மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
குறித்த நிதியினை எவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு நிதியீட்டினை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13.07.2012) வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும், மாலை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.
திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநதி சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜே. லியாகத்அலி, அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக திட்டமிடல் பணிப்பாளர் அன்புடீன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment