முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடு ஏற்படுவதை விரும்புகிறோம்: சம்பந்தன்
எமக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஓர் இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இது விடயமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் நாம் தெரிவித்திருக்கின்றோம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று திருகோணமலையில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,
'நடக்கவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும். வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமானால் இதுனைக் கொண்டு சர்வதேச சமூகம் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற பாரிய பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இத்தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது. அரச கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எந்த தமிழரும் இத் தேர்தலில் வெற்றிபெறக் கூடாது. இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் இத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்' என்றும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment