அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க காத்தான்குடி பேரீத்தம் பழத்தை சுவைத்துப் பார்த்தார்


முக்கிய நிகழ்வொன்றுக்காக மட்டக்களப்புக்கு இன்று (02.07.2012) விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க,காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்துக் குலுங்கும் 27 ஆம் இலக்க பேரீத்த மரத்தின் பழங்களை தாமாகவே ஆய்ந்து சுவைத்துப் பார்த்தார். கல்வி அமைச்சருடன் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வி. முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட கல்வி அமைச்சருக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலய மஜ்லிஸில் அரபுநாட்டு முறையில் உபசரிப்புகள் இடம்பெற்றன.

இதேவேளை, அமைச்சர் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்