நோன்பு காலத்தை தவிர்த்து பிறிதொரு தினத்தில் தேர்தல்


ஆணையாளரிடம் ஹுனைஸ் MP கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத்தேர்தலை நோன்பு காலத்தை தவிர்த்து பொருத்தமான தினத்தில் நடத்துமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹ¥னைஸ் பாரூக் எம்.பி தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாநாட் டின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்தார். தேர்தல் காலத்தில் நோன்பு வருவதால் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முஸ்லிம்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
எனவே தேர்தலை செப்டம்பர் 15ஆம் திகதியளவில் நடத்த ஆவன செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தபோது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையாளர் உறுதியளித்தார். இதேவேளை செப்டம்பர் 1ஆம், 8ஆம், 15ஆம் திகதிக ளில் ஏதாவதொரு தினத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்