அம்பாறை மாவட்டத்தில் 441,287 பேர் வாக்களிக்கத் தகுதி

கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 441,287 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.அர்ச்சுதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதியில் 153,079 வாக்காளர்களும், பொத்துவில் தொகுதியில் 144,329 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 75,640 வாக்காளர்களும், கல்முனைத் தொகுதியில் 68,239 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் பதினான்கு  உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்கு 464 வாக்களிப்பு நிலையங்களும் 29 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப் படவுள்ளது 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்