கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பேரியல் அஷ்ரப்
கிழக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என முன்னாள் அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் தற்போதய சிங்கப்பூர் நாட்டுக்கான தூதுவரமான ஜனாபா பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நான் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் என்னம் கிடையாது. அதற்கான வாய்ப்புமில்லை. நான் தற்போது சிங்கப்பூர் நாட்டுக்கான தூதுவராக கடமையாற்றுகின்றேன்.
எனது பெயரும் அடிபடலாம் காலத்துக்காலம் இவ்வாறான தேர்தல்கள் வரும் போது பெயர்கள் அடிபடுவது வழக்கமாகும். நான் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment