கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்கள் சாதனை



கல்முனை கல்வி வலயத் திலுள்ள கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாண வர்கள் பலர் கிழக்கு மாகாண மட்டத்திலான மெய்வல் லுனர் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண் டாம், மூன்றாம் இடங்க ளைப் பெற்று மீண்டும் இப் பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இதற்கமைய கே. தனுசியா என்ற மாணவர் 21 வயதுக் குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டிக ளில் முதலாம் இடங்க ளைப் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள் ளார்.
இதே போன்று ஐ. இதய ராகிணி என்ற மாணவி 21 வயதுக்குட்பட்ட பெண்க ளுக்கான 100 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டி யில் இரண்டாம் இடத்தி னைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினையும், 400 மீற்றர் தடைதாண்டல் போட்டி யில் மூன்றாம் இடதினைப் பெற்று வெங்கல பதக்கத் தையும் வென்றுள்ளார்.
கிஸ்சன் ராஜ் என்ற மாணவன் பரிதிவட்டம் வீசுவதில் 2ம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத் தையும், வீ. கர்சனா என்ற மாணவி ஈட்டி எறிதலில் 4ம் இடத்தையும் பெற்றுள் ளார். மேற் கூறப்பட்ட மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
பெரு விளையாட்டுக்க ளின் அடிப்படையில் உடற் பயிற்சி கண்காட்சியில் 3ம் இடத்தினை இப்பாட சாலை பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்