கலைக்கப்பட்ட மாகாணசபை முதலமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மாகாணசபைகள் கலைக்கப்பட்டபோது முதலமைச்சர்களாக இருந்தவர்களையே கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை கூறியது. 

இந்த தீர்மானத்துக்கமைய சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் தத்தம் மாகாணங்களில் ஐ.ம.சு.கூ அணிகளுக்கு தலைமை தாங்குவர். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் அவற்றுக்காக ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளரான சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். 

ஐ.ம.சு.கூட்டமைப்பில் ஆகவும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த தேர்தலுக்காக புனரமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய சுசில் பிரேமஜயந்த, முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களே மீண்டும் பிரதம வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது