முக்கூட்டு சிக்கறுக்கலாமா?


தமக்குள் கூட்டணி அமைத்து ஒருமித்த குரலில் அரசுடன் பேச்சு நடத்த முடிவு

கிழக்கில் வலுப்பெற்றுவரும் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை;
பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லை எனவும் தீர்மானம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலை யில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி களான முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சியும் முதலமைச்சர் கோரிக்கையில் ஒருமித்து செயற் படுவதெனவும், தேர்தல் பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லையெனவும் முடிவெடுத்துள்ளன.
அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்தக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், ஹுனைஸ் பாரூக் எம்.பி, அஸ்லம் எம்.பி, வை.எல்.எஸ்.ஹமீட் சட்டத்தரணி என்.எம்.சஹீட் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்துக்கு முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹுனைஸ்பாரூக் எம்.பி மிகவும் சுமுகமான முறையிலும் புரிந்துணர்வின் அடிப்படையிலும் இந்தக் கூட்டம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பாக மேலும் ஆக்கபூர்வமான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மூன்று கட்சிகளின் தலைவர்களுடனும் ஏற்பாட்டாளர்களுடனுமான ஒரு சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் ஜம் இய்யதுல் உலமா சபைத்தலைவர் மெளலவி றிஸ்வி முப்தி, மெளலவிகளான கலீல், முபாரக், அkஸ் மிஸ்பாஹி மற்றும் சட்டத்தரணி ரiத் எம். இம்தியாஸ், அஸ்கார் கான், சிராஜ் மசூர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? அல்லது ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா? என்ற தெளிவான நிலைப்பாட்டை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதபோதும் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிடவுள்ளதாக கட்சி உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள தமது கட்சி அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்