கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒப்பந்த அடிப்படையில் அரசுடன் முகா இணைந்து போட்டி
அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதென நேற்று இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த தீர்மானத்தை முன் வைத்தார். அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இடம்பெற்ற சந்திப்பு பற்றியும் அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த இணக்கம் பற்றியும் உயர்மட்ட குழுவுக்கு விளங்கப்படுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர்மட்ட குழு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதென ஏகமனதாக தீர்மானம் எடுத்தது.
இத்தீர்மானத்துக்கு இணங்க அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.

Comments
Post a Comment