* மட்டு. பாலமீன்மடு, * களேவெல, * நிக்கவரெட்டிய மட்டக்களப்பு, பாலமீன்மடு, களேவெல மற்றும் நிக்கவெரட்டிய ஆகிய பிரதேசங்களில் நேரே இன்று 09 ம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் மெரில் மெண்டிஸ் நேற்றுத் தெரிவித்தார். நண்பகல் 12.12 மணிக்கு மேற்படி பிரதேசங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, அம்பாறை, காரைதீவு, அக்குறணை, கலகெதர, கட்டுநேரிய ஆகிய பிரதேசங்களில் நேரே சூரியன் நேற்று நண்பகல் 12.12 மணிக்கு உச்சம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். வருடா வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையும் சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுப்பது வழமையாகும். அந்தடிப்படையில் இந்தக் காலப் பகுதியில் தினமும் வெவ்வேறு பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கின்றது. இந்தக் காலப் பகுதியில் இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுப்பதால் வெப்பம் சிறிதளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.