Posts

நாய்களை கொல்லுதல் அல்லது அடித்து ஊனமாக் குதல் தண்ட னைக்குரிய குற்றமா கும்

Image
மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானைகள், சிறுத்தை, கரடி, மயில் போன்ற மிருகங்கள் நாட்டின் தேசிய வளங்களாக இருப்பதனால், அவற்றை இறைச்சிக்காக அல்லது வேறு ஏதாவது இலாபமடையும் நோக்கத்திற்காக சுட்டுக் கொல்வது எங்கள் நாட்டின் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். அது போன்றே மனிதனின் நெருங்கிய நண்பனான நாயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு மிருகமாகும். நாய்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது அடித்துக் கொல்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகவே, நாய்களை கொல்லுதல் அல்லது அடித்து ஊனமாக் குதல் தண்ட னைக்குரிய குற்றமா கும் எனவும் அதில் சம்பந்தப்பட்டவர் களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது. நாய்கள் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டும் அடித்தும் நச்சு ஊசிகளைக் குத்தியும் கொல்வது உடனடியாக தடுக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அவற்றை அழிப்பது அவசியம் என்ற சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு இத்தகைய...

மார்ச் 8, 9ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு

Image
உள்ளூராட்சித் தேர்தல்: சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த வர்களின் விண்ணப்பப்படிவங்கள் நேற்று (25) தபால் திணைக்களத்திடம் பெற்றுக்கொடுத்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மார்ச் மாதம் 8 - 9 திகதிகளில் இடம் பெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பிற்கு மூன்று இலட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றி ஆறு பேர் விண்ணப்பித் துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ள மையால் 66 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர் தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 8 உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இது வரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தேர்தல் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

கல்முனை C.E.B ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Image
இலங்கை மின்சார சபை  மின் மணி வாசிப்பாளர் ஒருவர் சம்மாந்துறையில் வைத்து தாக்கப்பட்டதை கண்டித்து  கல்முனை மின்சார சபை  முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

சாரணர்களுக்கு வெள்ள நிவாரணம்

Image
வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர்களுக்கு இலங்கை சாரணர் சங்க ஏற்ப்பாட்டில் அப்பியாச கொப்பிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நேற்று கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இவ் வைபவம் இடம் பெற்றது. இவ்வைபவத்தில் ஜனாதிபதி விருது பெற்ற மூவருக்கு  சின்னங்கள் பொறிக்கப்பட்டன.

கல்முனைக்கு உயர் நீதிபதி வருகை

Image
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று  நேற்று  உயர் நீதிபதி அசோகா டி சில்வா , நீதியமைச்சர்  ரவுப் ஹக்கீம்  ஆகியோர் கல்முனைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்குமகப்பேற்று மருத்துவ சேவை

Image
சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்கு வாரத்தில் ஒரு நாள் மகப்பேற்று மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையில் நடை பெற்றது, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர்  டாக்டர்.ஏ.எல்.எப்.ரகுமான்  உட்பட வைத்திய அதிகாரிகளும் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி  டாக்டர்.எம்.டி.இப்ராலேப்பே  தல்மைலான வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினரும்  கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில்  அபிவிருத்தி குழுவினரால் முன்வைக்கப்பட்ட மகப்பேற்று வைத்தியரின் தேவை குறித்து  தெரிவிக்கப்பட்ட போது  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை மகப்பேற்றுவைத்தியரை ஒரு நாளைக்கு விடுவித்து தருவதாக உறுதி வழங்கியதை அடுத்து  வாரத்தில் வெள்ளிகிழமை மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நபி பிறந்த விழா

Image
 

நவீன MP3 கைத்தொலைபேசிகளால் கேட்கும் திறன் குறைவு

Image
நவீன MP3 கைத்தொலைபேசிகளால் கேட்கும் திறன் குறைவு அடைகின்ற பேரபாயம் காணப்படுகின்றது என இலங்கையின் தொழிநுட்ப அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்து உள்ளது. இக்கைத்தொலைபேசிகளை தொடர்ந்து உபயோகிக்கின்றமையால் கேட்கும் திறன் குறைவடைந்து செல்கின்றது என அமைச்சைச் சேர்ந்த துறை சார் நிபுணர்கள் எச்சரித்து உள்ளார்கள். இவ்வாறான மின்னியல் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றமை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்றும் சுட்டிக் காட்டி உள்ளார்கள். குறிப்பாக மலிவு விலையில் உள்ள இவ்வாறான உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றமைக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என்பது குறித்து பொதுமக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்கள். இலங்கையில் 14 மில்லியன் மக்கள் கைத்தொலைபேசிகளை உபயோகிக்கின்றனர். இவ்வாறான மின்னியல் உபகரணங்களை உபயோகிக்கும் போது ஒலியின் அளவை 50 சதவீதத்தை விட குறைத்து கேட்கும்படியும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

கல்முனை நகரில் கட்டாக்காலி களைகட்டுப்படுத்த கல்முனைமாநகர சபை தவறுவதாக மக்கள் குற்றம் சாட்டு

Image
கல்முனை நகரில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை தவறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பகல் வேளையில் பசு மாடுகளும், இரவு வேளையில் எருமை மாடுகளும் கல்முனை மாநகரை ஆட்சி புரிவதால் பல விபத்து சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.  கல்முனை வர்த்தகர்களும் ,பொதுமக்களும் கல்முனை மாநகர சபைக்கு பல முறைப்பாடுகள் செய்தும் மாநகர சபை நிறுவாகம் அது பற்றி கவலை கொள்ளாது அசட்டை செய்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது, கல்முனை மாநகர சபை மக்களுக்கு நன்மை செய்யா  விட்டாலும் மிருகத்தையாவது கட்டுப்படுத்துமா என்ற கேள்வி பலராலும் கேட்க்கப்படுகின்றது

அம்பாறை மாவட்டத்தில் மழைவெள்ளம் வடிகிறது

Image
அம்பாறை மாவட்டத்தில் மழை ஒய்ந்து வெள்ளம் வடிகிறது. இயல்பு நிலை வழமைக்கு திரும்பி போக்குவரத்துக்கள்  படிப்படியாக இடம்பெற்று வருகின்றது. வெள்ளம் காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்த கல்முனை கிட்டன்கிப்பாதை ,காரைதீவு மாவடிப்பள்ளி பாதை என்பற்றின் ஊடாக மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

கல்முனைஇலங்கை வங்கி முன்பாகபோராட்டம

Image
அரச வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அரசு அமுல்படுத்த வேண்டும் என்கிற் கோரிக்கையுடன் இன்று நாடு பூராவும் தேசிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்போராட்டங்கள் இடம்பெற்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இப்போராட்டங்கள் இன்று முடுக்கி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச வங்கி ஊழியர்களின் யாழ்.மாவட்ட கிளை இப்போராட்டங்களை ஒழுங்கு செய்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இப்போராட்டங்கள் நடந்தன. அம்பாறையில் கல்முனைப் பிரதேசத்தில் இலங்கை வங்கி முன்பாகவும்  போராட்டம இடம் பெற்றது

கல்முனை மாநகர சபை உறுப்பினர்மாநகர சபை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் கரீம் முஹமது முபீத்  இன்று மாநகர சபை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தார். கடந்த ஐந்து வருடமாக தன்னை மாநகர சபை புறக்கணித்து வருவதாகவும்  அன்மாயில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு மாநகர சபை எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி மாநகர சபைக்கு எதிராக் தனது எதிர்ப்பை கூரை மீது ஏறி  தெரிவித்தார் . கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் மசூர் மவ்லானா தலைமையில் இன்று காலை நடை பெற்ற வேளை மேல்  குறிப்பிட்ட குற்றங்களை குறிப்பிட்டு சபையில் உரையாற்றினார்.அவரது கூற்று நிராகரிக்கப்பட்டதனால்  இன்று காலை 10.40 மணி தொடக்கம் 11.15 வரைக்கும் கூரை மீது ஏறி தனது எதிர்ப்பை தெரிவித்தார் . தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக மாநகர முதல்வர் மசூர் மவ்லானா உறுதி வழங்கியதன் பின்னர்  அவரது போராட்டம் கைவிடப்பட்டது.

அம்பாறையில்அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

Image
மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று வெள்ளியன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் காரைதீவு போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்தார். காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி அகதி முகாமிலுள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடுவதைப் படங்களில் காணலாம்

கிட்டங்கி வாவியில் வள்ளம் கவிழ்ந்து இருவர் மாயம்

Image
  அம்பாறை மாவட்டத்தின் அன்னமலை மற்றும்   நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் இருந்து கல்முனைப் பிரதேசத்துக்கு கிட்டங்கி வாவி ஊடாக தோணி ஒன்றில் பயணித்தவர்களில் இருவர் இன்று காலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். தோணியில் ஒன்பது பேர் புறப்பட்டு இருந்தனர். உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்கின்றமைக்காக பயணித்தனர். ஆனால் இடைப் பயணத்தின்போது தோணி வேகமான நீரோட்டத்தால் கவிழ்ந்து விட்டது. ஏழு பேர் ஒருவாறு கரை சேர்ந்து விட்டனர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடல் படையினரும், விசேட அதிரடிப் படை பொலிஸாரும் ஈடுபட்டு உள்ளார்கள். அன்னமலையை சேர்ந்த முத்துராமன் கணேசன் வயது (37 ), நாவிதன்வெளியை சேர்ந்த இராசையா அசோக்குமார் வயது (42 ) ஆகியோரே காணாமல் போய் இருப்பவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பாக சவளக்கடைப் பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கிற்கு விஷேட வைத்திய குழுக்கள் - சுபைர்

Image
MS.Subair கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ள நிலையினை கவனத்திற் கொண்டு 3 மாவட்டங்களுக்கு விஷேட வைத்திய குழுக்கள் மூன்றினை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சார் எம்.எஸ்.சுபைர் தெரிவிக்கின்றார். நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் தொற்று நோய்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உடனடி நடவடிக்கையெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுபைர் தெரிவித்தார் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனில் அதிக கவனம் செலுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ள அமைச்சர், அவர்களுக்கான தேவைகளை எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கையயெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அருகில் அம்பியுலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அமைச்சர் சுபைர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதேவேளை கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதாக தெரிவித்த மாகாண அமைச்சர் சுபைர், வைத்தியர்களு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று உலர் உணவு

Image
கல்முனை மாநகர வர்த்தக சங்கத்தின் ஏற்ப்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்ட போது  பிடித்த  படம்

மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு

Image
அம்பாறை மாவட்ட மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எல்.துல்கர் நயீம்  தனது சொந்த நிதியில் இருந்து  1500 பேருக்கு  தலா 500 ரூபா பெறுமதியான  உளர் உணவு பொதிகளை இன்று மருதமுனையில் வைத்து  வழங்கினார் .

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகள் 31 இல்

Image
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இம் மாவட்டத்திலுள்ள ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் மெரிகோல்ட் கிண்ண சுப்பர் லீக் சுற்றுப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாக வுள்ளதாக அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. எம். இப்ராஹிம் தெரி வித்தார். மெரிகோல்ட் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை முஸ்லிம் விளையாட்டுக் கழகம், மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம், மருதமுனை கோல்மைன்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பிளைன்ஸ் கோஸ் விளையாட்டுக்கழகம் ஆகிய உதைபந் தாட்டக் கழகங்கள் விளையாடவுள்ளன. மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டுத்திடலில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அரபு கல்லூரி மண்டப திறப்பு விழா

Image

கல்முனை விதாதா வளப் பயிற்சி நிலையத்தில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

Image
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்கான விதாதா வள மத்திய பயிற்சி நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த வள நிலையத்தில் இளைஞர்,யுவுதிகளுக்கான கணினிப் பயிற்சி,தையல் பயிற்சி,அலங்கார வேலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன. அண்மையில் கணினிப் பயிற்சியை முடித்த 40 இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த வள நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவுவேளை உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினிகள் மற்றும் கணினிகளுக்கு பயன்படுத்தும் உதிரிப்பாகங்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வள நிலையத்துக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறைப்படிதான் நடைபெறுமாம்

Image
உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனவர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையில்தான் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு என்று என்று தெரிய வருகின்றது . ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய உள்ளுர்ராட்சி தேர்தல் முறைக்கு அமைவாக விகிதாசார மற்றும் வட்டார கலப்பு தேர்தல் நடாத்து வதற்கு அரசு திட்டமிட்டுள்ளபோதும் குறுகிய காலத்துக்குள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி இருப்பதால் விரிவாக பார்க்க மேற்படி சட்ட மூலத்தை ஜனவரியில் பாராளுமன்றத்தில் அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்குவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளன போதிலும் உடன் நடைமுறை படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தெரிகின்றது இதனால் உள்ளுர்ராட்சி...

தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது !!

Image
கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியாவின் மரணம் தற்கொலை என மட்டக்களப்பு சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்ததனை தொடர்ந்து ஜனாஸா மீண்டும் பழைய இடத்தில் அன்றைய தினமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது . 21 வயதான திருமணமாகி 14 மாதங்கள் கடந்த நிஜாமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் கணவரின் தந்தை கல்முனை பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றிஸ்வியின் உத்தரவின் விரிவாக பார்க்க பேரில் ஜனாஸா பரிசோதனைக்காக கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பரிசோதனை செய்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்கள் பெண்ணின் மரணம் தற்கொலையென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

சுகி சுகாதார சஞ்சிகையின் வெளியீடு

Image
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முத்திங்கள் வெளியீடான சுகி சஞ்சிகையின் 2 வது இதழ் வெளியீட்டு விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றகுமான் தலைமையில் வைத்தியசாலையில்    கடந்த செவ்வாயன்று    நடைபெற்றது .   அங்கு   முதற்   பிரதிகளை டாக்டர் றகுமான் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா டாக்டர் ஜெமீல் ஆகியோர் வழங்கி வைப்பதையும் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்   பாறுக் அமர்ந்திருப்பதையும் ;  கலந்துகொண்டவர்களையும்     படங்களி ல் காணலாம்

துப்பாக்கி வைதிருந்தவற்குகு ஆயுட்கால சிறைத்தண்டனை

Image
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார் சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க மேற்படி வழக்கு விசாரணையின் போது கூண்டிலிருந்து அளித்த வாக்கு மூலம் நம்பகத்தன்மையில்லாதது என்று நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார் என்று அறிய முடிகின்றது

65 காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள்

Image
நாட்டின் சகல காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் தனித்தனியான முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்க நீதியமைச்சர் ரவூப் ஹகீம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது தற்போது இலங்கையில் உள்ள 65 காதி நீதிமன்றப் பிரிவுகளுக்கும்  முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரி கள்  நியமிக்கபடவுள்ளனர் என்பதுடன் முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை  நியமிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது விரிவாக பார்க்க முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள் போதாமையால் ஜனாக் சகளை உரிய நேரத்தில் அடக்கம் செய்வதிலும் அவற்றை வைத்திய சாலைகளில் இருந்து பெற்று கொள்வதிலும் பெரிதும் சிரமங்கள் எதிர்கொள்வதை தவிர்க்கும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது மேலும் கணவனை இழந்த ‘இத்தா’ இருக்கவேண்டிய மனைவியர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்க்கும் முகமாக  முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை  நியமிக்கவும் நடவடிக்கைகளை நீதியமைச்சர் ரவூப் ஹகீம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது