கிட்டங்கி வாவியில் வள்ளம் கவிழ்ந்து இருவர் மாயம்

 

அம்பாறை மாவட்டத்தின் அன்னமலை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் இருந்து கல்முனைப் பிரதேசத்துக்கு கிட்டங்கி வாவி ஊடாக தோணி ஒன்றில் பயணித்தவர்களில் இருவர் இன்று காலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

தோணியில் ஒன்பது பேர் புறப்பட்டு இருந்தனர். உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்கின்றமைக்காக பயணித்தனர்.

ஆனால் இடைப் பயணத்தின்போது தோணி வேகமான நீரோட்டத்தால் கவிழ்ந்து விட்டது.

ஏழு பேர் ஒருவாறு கரை சேர்ந்து விட்டனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடல் படையினரும், விசேட அதிரடிப் படை பொலிஸாரும் ஈடுபட்டு உள்ளார்கள்.

அன்னமலையை சேர்ந்த முத்துராமன் கணேசன் வயது (37 ), நாவிதன்வெளியை சேர்ந்த இராசையா அசோக்குமார் வயது (42 ) ஆகியோரே காணாமல் போய் இருப்பவர்கள் ஆவர்.
சம்பவம் தொடர்பாக சவளக்கடைப் பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்