மார்ச் 8, 9ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு



சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த வர்களின் விண்ணப்பப்படிவங்கள் நேற்று (25) தபால் திணைக்களத்திடம் பெற்றுக்கொடுத்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
மார்ச் மாதம் 8 - 9 திகதிகளில் இடம் பெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பிற்கு மூன்று இலட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றி ஆறு பேர் விண்ணப்பித் துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ள மையால் 66 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர் தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 8 உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இது வரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தேர்தல் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்