சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்குமகப்பேற்று மருத்துவ சேவை
சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்கு வாரத்தில் ஒரு நாள் மகப்பேற்று மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையில் நடை பெற்றது, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர்.ஏ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகளும் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.டி.இப்ராலேப்பே தல்மைலான வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் அபிவிருத்தி குழுவினரால் முன்வைக்கப்பட்ட மகப்பேற்று வைத்தியரின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்ட போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை மகப்பேற்றுவைத்தியரை ஒரு நாளைக்கு விடுவித்து தருவதாக உறுதி வழங்கியதை அடுத்து வாரத்தில் வெள்ளிகிழமை மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment