கல்முனை மாநகர சபை உறுப்பினர்மாநகர சபை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் கரீம் முஹமது முபீத் இன்று மாநகர சபை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தார். கடந்த ஐந்து வருடமாக தன்னை மாநகர சபை புறக்கணித்து வருவதாகவும் அன்மாயில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு மாநகர சபை எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி மாநகர சபைக்கு எதிராக் தனது எதிர்ப்பை கூரை மீது ஏறி தெரிவித்தார் .
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் மசூர் மவ்லானா தலைமையில் இன்று காலை நடை பெற்ற வேளை மேல் குறிப்பிட்ட குற்றங்களை குறிப்பிட்டு சபையில் உரையாற்றினார்.அவரது கூற்று நிராகரிக்கப்பட்டதனால் இன்று காலை 10.40 மணி தொடக்கம் 11.15 வரைக்கும் கூரை மீது ஏறி தனது எதிர்ப்பை தெரிவித்தார் .
தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக மாநகர முதல்வர் மசூர் மவ்லானா உறுதி வழங்கியதன் பின்னர் அவரது போராட்டம் கைவிடப்பட்டது.
Comments
Post a Comment