Posts

கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமை

Image
கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவத்தை நடை முறைப்படுத்த கல்முனை மாநகர சபையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூநோப்ஸ் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சந்திப்பு மாநகர் முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் இடம் பெற்றது.  இச்சந்திப்பில் யூநோப்ஸ் அதிகாரிகளும்  மாநகர ஆணையாளர்,கணக்காளர்.பொறியியலாளர் உட்பட உத்தி யோகதர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை குடும்பஸ்தரின் சடலத்தை ஒப்படைப்பதில் ஆஸ்பத்திரிகள் அசமந்தம்!

Image
உயிர் பிரிந்த பின்னரும் உடலுக்கு நிம்மதியில்லை; ஆஸ்பத்திரியில் மரணித்த ஒருவரின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்வதற்கு ஆஸ்பத்திரி உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடி வரம் கேட்கும் கேவலமான நிலை கல்முனையில் ஏற்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆஸ்பத்திரி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரி இரண்டுமே இந்தப் பிரதேசத்தில் சகல வசதிகளுடன் இயங்கும் ஆஸ்பத்திரிகள். என்றாலும், இங்கு பணியாற்றுகின்ற ஒருசில உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால், மாரடைப்பால் இறந்த ஒருவரது சடலம் இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் அலைமோதி அல்லல் பட்டது. மனிதாபிமானமும் மனித உணர்வும் இல்லாத அதிகாரிகளால் காலை 7 மணி யளவில் மரணித்த ஒரு வரின் சடலம் இரவு ஆகியும் உறவினர்க ளிடம் கையளிக்க முடி யாத நிர்வாகச் சீர்கேடு மேற்படி இரு ஆஸ்பத் திரிகளிலும் மிகத் தாரா ளமாகவே இருக்கிறது. கடந்த 17ம் திகதி இங்கு நடந்த சம்பவம் உறவினர்களை மாத்திரமல்ல, சாதாரண மக்களையும் கொதிப்படையச் செய்யும். கல்முனையைச் சேர்ந்த செல்வக்குமார் (37 வயது) என்பவர் திடீர் நோய்வாய்ப்பட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் போது மாரடைப்ப

பொத்துவில் பிரதேச செயலாளராக தௌபீக் நியமனம்

Image
பொத்துவில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நியாஸ் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டு வெளிவிவகார அமைச்சுடன்இணைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட தௌபீக், 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார். இதனையடுத்து நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.

நுவரெலியாவில் ஐஸ் கட்டி மழை!

Image
நுவரெலியா மாவட்டத்தில் இன்று  காலை ஆலங்கட்டி மழை (ஐஸ் கட்டி மழை)பெய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது. இதேவேளை- நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு குளிர் காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு $றியுள்ளது.

உயிர் ஆபத்து கல்வி, எங்கே அரசியல் வாதிகள் அதிகாரிகள் ?

Image
கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடத் தின் மேற்கூரையின் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்துள்ள நிலையில் மாணவர்கள் கல்வி கற் கும்  அவலத்தையே படத்தில் காண்கின்றீர்கள் . 

ஏ380: உலகில் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

Image
உலகிலேயே மிகப்பெரிய விமானமான எ380 எயார்பஸ் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எமிரேட்ஸ்சுக்கு சொந்தமான இந்த பாரிய எயார்பஸ் அவுஸ்திரேலியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் வழியில் இடை நடுவே எரிபொருள் தேவைகாரணமாக நேற்று அதிகாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எ380 எயார்பஸ் இலங்கையில் தரையிறக்கப்பட்டபோது அதில் 487 பயணிகளும் அவர்களுக்கு மேலதிகமாக 30 விமான சிப்பந்திகளும் இருந்ததாக சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது. உலகிலேயே மிகப்பெரிய விமானம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள தென்றால் அதற்கான அனைத்து வசதிகளை யும் ஏற்பாடுகளையும் எமது கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டுள்ள தென்பதன் பிரதிபலிப்பே இதுவென்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியன்கர ஜயரத்ன தெரிவித்தார். அத்துடன், விமான போக்குவரத்துக்கு எமது இலங்கை சிறந்த தொரு கேந்திர நிலையமாகவுள்ள தென்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டெனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு

Image
  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் ஆரம்பமானது. புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு  பயிற்சி வழங்கும் உள்ளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை உள்ளளூர் ஆளுகை நிறுவகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இச்செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட 20 உள்ளூராட்சி மன்றங்களின் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழி மூல இச்செயலமர்வு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கிலும் சிங்கள மொழி மூலமான செயலமர்வு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியிலும் இடம்பெற்று வருகின்றன.

சுனாமி வீடுகளை கையளிக்குமாறு மருதமுனைமக்கள் ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 178 குடும்பங்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மருதமுனை பிரதேசத்தில் 178 குடும்பங்களுக்கு இன்று 7 வருடங்களாகியும் வீடுகள்; வழங்கப்படாதுள்ளன. இவர்களுக்காக மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை கையளிக்கப்படாத நிலையில் உள்ளன.  அத்துடன், இவ்வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாது பூட்டிய நிலையில் இவ்வீடுகள் உள்ளன. வீடுகள் உள்ளபோதிலும் அவற்றில் குடியிருக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தருமாறு கோரி கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிரதேச செயலாளர் எம்.எம்.நெவ்பல் இது குறித்த

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம்

Image
கல்முனை மாநகர சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் அரச நியதிக்கமைய இன்று காலை ஒன்பது மணிக்கு  மாநகர ஆணையாளர் ஜே.எம்.லியாகத் அலி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்தனர்.

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா

Image
மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் விழா குழு தலைவர் ஏ.ஆர்.ஸாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மண்டபத்தில் நடை பெற்றது.விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேர்க்கப் படுவதையும், பூரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப்  மாணவன் எம்.எம்.அதூப் அகமதுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.
Image
கண்ணீர் இருப்பில்லை அலைகடலே உன் கரையில் விளையாடியது குற்றமென பிஞ்சுகளின் உயிரோடு விளையாடிவிட்டாய். உன் மடியில் வலை வீசியது குற்றமென மீனவர்களின் உயிரை விலை பேசிவிட்டாய் . குழந்தைகளை பிரித்து பெற்றோர்களை அனாதயாக்கினாய் பெற்றோரை பிரித்து குழந்தைகளை அனாதயாக்கினாய். இன்னும் யாரை பிரிக்க அலை அலையாய் அலைந்துகொண்டு இருக்கிறாய்? இங்கு இறப்பதற்கு இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம் இறந்த பின் சிந்துவதற்கு கண்ணீர் தான் இருப்பில்லை…

சுனாமி ஏழாண்டு நினைவு கல்முனையில்

Image
தகவல்- கல்முனை இஸ்ஹாக் ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் ஏழாண்டு நினைவு வைபவம் கல்முனையில் நடை பெற்றது. மரணித்தவர்களின் நினைவாக கல்முனை மாமன்க வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள நினைவு தூபிக்கருகில் இடம் பெற்ற இவைபவதில் அதிகாரிகள் உட்பட பல போது மக்களும் கலந்து கொண்டு உறவுகளுக்காக தீபமேற்றி வழிபட்டனர். மக்கள் தங்கள் உறவுகளின் நினைவாக தேம்பி தேம்பி அழுதனர் இதேவேளை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் ஜனாஸா நலன் புரி சங்கம் ஏற்பாடு செய்த விசேட துவா பிரார்த்தனையும் நடை பெற்றது. அதே வேலை கல்முனை மாநகர மேயர்  சிராஸ் மீரா  சாஹிப் தலைமையில் நடை பெற்ற சுனாமி நினைவு தின வைபவத்தில் மாநகர சபை உத்தியோகத்தர்களும்  கலந்து பிரார்த்தனை செய்தனர். 

சம்மாந்துறையில் மாணவி கொலை சந்தேகம்

சம்மாந்துறை,  மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை மாநகர சபையின்வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Image
கல்முனை மாநகர சபையின் 2012ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினதும் ஆதரவுடன் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகர சபை மாதாந்த பொதுக் கூட்டம் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் நேற்று நடைபெற்றது. கல்முனை மாநகர சபை 2012ம் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானமாக 17கோடி 43 இலட்சத்து 59 ஆயிரத்து 60 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக 17கோடி 43 இலட்சத்து 42 ஆயிரத்து 788 ரூபாவும் என முதல்வரினால் முன் வைக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார். அரசின் நெல்சிப் திட்டத்தின் மூலம் 4 கோடி 70 இலட்சம் ரூபாவும் பிரமாண அடிப்படையிலான நன்கொடையாக 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக 10 இலட்சம் ரூபாவும் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மாநகரசபை எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் உட்பட உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். உறுப்பினர்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தைத் தொடர்ந்து வரவு செலவுத்

தொலை பேசி அவசர தகவல் பெற

வாடிக்கையாளர் வசதி கருதி கல்முனை நியூஸ் இணையத்தளம் கையடக்க தொலை பேசியில் அவசர செய்தி சேவை வழங்க ஆரம்பித்துள்ளது. உங்களுடைய dialog, mobital , eatislat  ஆகிய தொலை பேசி ஊடாக follow kalmunai_news என type  செய்து 40404  எனும் இலக்கத்துக்கு SMS செய்யவும் 

டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்

Image
விதவைகள், அநாதைகள், தபுதாரர் ஓய்வூதியம்: பணிப்பாளர் கே.ஏ. திலகரட்ண விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர்கள் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய உரிமை கோரும் விண்ணப்பங்களை ஓய்வூதிய திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தினம் டிசம்பர் 31 ஆம் திகதி என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே. ஏ. திலகரட்ண அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி பின்வரும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்நிகழ்வுகள் யாவும் 2010 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் * பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக உயிரிழந்த அரச அலுவல்கள் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பாத்திய அடிப்படையில் விதவைகள், அநாதைகள், தபுதாரம் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து ஓய்வூதியம் வழங்கல். * அமைய, தற்காலிக பதவியில் இருந்தோர் பயங்கரவாதம் காரணமாக, இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்திருந்தால் துணைவர்களுக்கு மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். * 26 வயதிற்

இராப்போசன வைபவத்தில் சந்திப்பு!

Image
நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட ஏனைய பாராளுன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இவ்விருந்துபசார நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் 

கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டும் மழையில் நனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்முனை வலய மேலதிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கல்முனை வலயத்திலிருந்து அக்கரைப்பற்று சம்மாந்துறை, திருக்கோயில், மட்டக்களப்பு மத்திய ஆகிய வலயங்களுக்கு 134 ஆசிரியர்கள் 2009.06.22 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு இணங்க இடமாற்றம் செய்யப்பட்டனர் இவர்கள் வெளி வலயத்தில் ஒரு போதும் கடமையாற்றாதவர்கள் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 8 வருடத்திற்கு மேல் கடமை புரிந்தவர்கள். 53 வயதுக்கு குறைந்தவர்கள் என்ற நியதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு 2 வருட நிபந்தனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த செய்தி உண்மையானதா

Image
மருதமுனை கமு/அல்-மனார் மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தினுள் குடைகளை பிடித்துக் கொண்டு க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளைப் படத் தில் காண்க. இந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. (படம்: நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் ரபீக் பிர்தெளவுஸ்) கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் மருதமுனை அல் மானார் மத்திய கல்லூரி கல்வி சமூகத்தில் பேசப் படுகின்ற ஒரு பாடசாலையாகும். கட்டட வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏன் இவ்வாறான நிலை ஏற்ப்பட வேண்டும் . இந்த செய்தி திட்டமிடப்பட்டு செயப்பட்டிருந்தால் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம். பரீட்சை நிலையத்தில் படம் எடுக்க அனுமதித்த அதிகாரிக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருதமுனை கல்வி சமூகம் கேட்டுள்ளனர்.

தேனிலவு வந்த பிரிட்டன் ஜோடிக்கு கட்டுநாயக்கவில் ஆனந்த அதிர்ச்சி!

Image
தேனிலவைக் கொண்டாட வந்து இருந்த பிரித்தானிய தம்பதி ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அரசினால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. Nehdia Chemby, John Chemby இருவரும் தேனிலவுக்கு உகந்த இடமாக இலங்கையை தெரிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை வந்து அடைந்தனர்.  இலங்கைக்கு இவ்வருடம் வந்த 800,000 ஆவது உல்லாசப் பயணி Nehdia ஆவார். 800000 ஆவது உல்லாசப் பயணியை வரவேற்க சுற்றுலாத் துறை அதிகாரிகள் முன் ஆயத்தங்களுடன் திரண்டு நின்றனர். பிரிட்டன் தம்பதிக்கு தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டு நினைவுப் பரிசில்கள் கொடுக்கப்பட்டன. எதிர்பார்த்து இராத மகிழ்ச்சி கலந்த பேரதிர்ச்சி என்றும் இத்தருணத்தை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் என்றும் இத்தம்பதி தெரிவித்து உள்ளது.

23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை

Image
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் 23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். கின்னஸ் சாதனைக்கான அரங்கில் தமிழ் உறவுகள் உட்பட ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். சுதாகரன் சிவஞானதுரையின் ( வயது 37 ) தலை மயிரில் ஒரு வகை நாடாவால் பலமாக சுருக்குப் போடப்பட்ட்து. தரையில் இருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தரத்தில் தொங்கினார். இவரது நிறை. 57 கிலோ. கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தியானம், யோகா ஆகியவற்றை வாழ்வியல் ஒழுக்கமாக கடைப்பிடித்து வருகின்றமையால்லும், . இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்துகின்றமையால் முடி மிகவும் பலமானதாக உள்ளமையாலும் இச்சாதனையை நிறைவேற்ற முடிந்து உள்ளது என சாதனை வீரன் சுதாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.  இவரது இச்சாதனை முயற்சி முன்பு இவ்வுலகில் எவராலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று!

Image
14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கொழும்பு- களுத்துறை- கம்பஹா- திருக்கோணமலை- அம்பாறை- காலி முல்லைத்தீவு-  யாழ்ப்பாணம்- கிளிநொச்சி- மன்னார்- புத்தளம்- அம்பாந்தோட்டை- மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில்  இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவடிக்கையால் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்படும் எனவும் அதனை கேட்டு மக்கள் அச்சமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.