ஏ380: உலகில் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்



உலகிலேயே மிகப்பெரிய விமானமான எ380 எயார்பஸ் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எமிரேட்ஸ்சுக்கு சொந்தமான இந்த பாரிய எயார்பஸ் அவுஸ்திரேலியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் வழியில் இடை நடுவே எரிபொருள் தேவைகாரணமாக நேற்று அதிகாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எ380 எயார்பஸ் இலங்கையில் தரையிறக்கப்பட்டபோது அதில் 487 பயணிகளும் அவர்களுக்கு மேலதிகமாக 30 விமான சிப்பந்திகளும் இருந்ததாக சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது.
உலகிலேயே மிகப்பெரிய விமானம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள தென்றால் அதற்கான அனைத்து வசதிகளை யும் ஏற்பாடுகளையும் எமது கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டுள்ள தென்பதன் பிரதிபலிப்பே இதுவென்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியன்கர ஜயரத்ன தெரிவித்தார்.

அத்துடன், விமான போக்குவரத்துக்கு எமது இலங்கை சிறந்த தொரு கேந்திர நிலையமாகவுள்ள தென்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டெனவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது