பொத்துவில் பிரதேச செயலாளராக தௌபீக் நியமனம்
பொத்துவில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நியாஸ் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டு வெளிவிவகார அமைச்சுடன்இணைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட தௌபீக், 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்.
இதனையடுத்து நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.
Comments
Post a Comment